இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த யோவான் 14ஆம் அதிகாரம் , இயேசுவானவர் பரலோகத்திற்குத் திரும்பி சென்று , தேவனுடன் நாம் வாழ்வதற்காக ஓர் ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துவதாக அவருடைய ( இயேசு) வாக்குறுதியுடன் இந்த அதிகாரம் தொடங்குகிறது (யோவான் 14:1-3). எவ்வாறாயினும், நம்முடைய இன்றைக்கான வசனத்தில், தேவனுடைய பிரசன்னத்தில் பரலோகம் இருக்கும் வரை அல்லது நம்மில் அவருடைய பிரசன்னம் இருக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை என்பதை கர்த்தர் நாம் அறிய விரும்புகிறார். நாம் தேவன் மீது அன்பு வைத்து , இயேசுவின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் வந்து நம்மோடு தம் வாசஸ்தலத்தை உருவாக்குகிறார் என்று கூறுகிறார் . என்ன ஒரு அருமையான மற்றும் கிருபை நிறைந்த வாக்குறுதி! பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரும் , இஸ்ரவேலின் பரிசுத்தருமான தேவன் வந்து நம் ஒவ்வொருவரிலும் தாம் வாசம் செய்யும்படி வாசஸ்தலத்தை உருவாக்குகிறார்.
என்னுடைய ஜெபம்
தேவனே , என்னுள் நிலைத்திருக்கும் உம் மாறாத சமூகத்திற்காக நான் நன்றிகளையும் துதிகளையும் செலுத்துகிறேன். நான் நினைப்பது, சொல்வது, செய்வது என எல்லாவற்றிலும் உமது பிரசன்னத்தின் பரிசுத்தத்தையும் கிருபையையும் என் வாழ்க்கை பிரதிபலிக்கட்டும். நீர் என்னிடம் வரும்போது என் இருதயம் ஆனந்த சத்தமிடுகிறது , அன்பான பிதாவே , "என்னில் நீர் வாசமாயிருக்க உம்மை வருக வருக என வரவேற்கிறேன் !" இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.