இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஒரு பெற்றோராக எனக்கு மிகவும் கடினமான சவால்களில் ஒன்று : எனது பிள்ளைகள், மனமுடைவதிலிருந்தும், காயப்படுவதிலிருந்தும் என்னால் எப்போதும் பாதுகாக்க முடியாது என்பதை அறிந்து கொண்டேயிருப்பது , அவர்கள் முதிர்ச்சியடையவும் வளரவும் அந்த வலிகள் அவர்களுக்கு அவசியமானது. அவற்றில் சில இந்த இருளாம் உலகில் வாழ்வதன் விளைவு வேதனையான முடிவுகளையே உண்டாக்கும் . இருப்பினும், நாம் அவர்களுடன் தேவனை குறித்து பகிர்ந்து கொண்டால், அவருடைய சித்தத்திற்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்தால், அவருடைய இறுதி வெற்றி, பராமரிப்பு மற்றும் நாம் அவருடனும் மீண்டும் இணைவதிலிருந்து எதுவும் அவர்களைத் பிரிக்க முடியாது என்று நாம் முழுமையாக நம்பிக்கை கொள்ளலாம் . நாம் அவர்களை எப்படி நேசிக்கிறோம் என்பதை அறிந்து, பிதா நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்று கற்பனை செய்து பாருங்கள், அவருடைய வீட்டில் அந்த பாதுகாப்பான இடத்திற்கு நம்மை கொண்டு வர ஆசைப்படுகிறார்! நாம் அந்த நீதியான வீட்டுக்கு திரும்பும் வரை, அவர் நம்மையும், நாம் நேசிப்பவர்களையும், இப்போதும், என்றென்றும் கவனித்துக் கொண்டிருப்பது ஆறுதலாக இருக்கிறதல்லவா?
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே,நீர் என்னைப் காண்கிறீர்கள் , கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் சில சமயங்களில் நான் உம்மைநோக்கிப் பார்க்கத் தவறிவிடுகிறேன், உம்முடைய பிரசன்னத்திலும், என் நித்திய வீட்டிலே ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும் பெற காத்திருப்பது கடினம். , அப்பா பிதாவே , அடியேன் உம்மை முகமுகமாய் பார்க்கும் நாளை எதிபார்த்து காத்திருக்கிறேன். அதுவரை, எனது எல்லா வழிகளிலும் உம்முடைய கண்காணிப்பு அக்கறையை நான் உணருகிறேன் , மேலும் ஒரு நாள் நான் பெறும் அனைத்திற்காகவும் இப்போது நன்றி செலுத்தி . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.