இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆவியானவர் நம்மில் வாழும்போது நம்மை வழிநடத்த ஒரு பிரமாணம் அல்லது சட்டம் தேவையில்லை. தம்முடைய புதிய உடன்படிக்கையின் கீழ் வாழும் மக்களுக்கு , தம்முடைய சட்டத்தை மனதில் பதிய வைப்பதாகவும், அதைத் தம்முடைய மக்களின் இருதயங்களில் எழுதுவதாகவும் தேவன் வாக்குக் கொடுத்திருந்தார் (எரேமியா 31:31-33). இந்த வேலையை பரிசுத்த ஆவியானவர் நம்மில் செய்கிறார். எந்தச் சட்டமும் தேவைப்படுவதைத் தாண்டி, தேவன் நம்மில் விரும்பும் தன்மையை பரிசுத்த ஆவியானவர் உருவாக்குகிறார் (கலாத்தியர் 5:22-23). நியாயப்பிரமாணம் தேவனுடைய சித்தத்தை நமக்குக் கற்பித்து, பாவம் எது நீதி எது என்பதை நமக்கு வெளிப்படுத்த முடியும். இருப்பினும், நியாயப்பிரமாண சட்டத்தால் நமது பாவச் சிந்தனைகளை சரிசெய்ய முடியாது அல்லது தேவனுடைய சித்தத்தின்படி வாழ நமக்கு அதிகாரம் அளிக்க முடியாது. மறுபுறம், இந்த செயலை பரிசுத்த ஆவியானவரால் செய்ய முடியும்! ஆவியானவர் நம்மைச் சுத்திகரித்து , மறுரூபமாக்கி , அதிகாரமளிக்கிறார், மேலும் எந்த நியாயப்பிராமாண சட்டமும் செய்ய முடியாத வழிகளில் தேவன் நம்மை அழைக்கிறாரோ அதுவாக இருக்க தூண்டுகிறது (ரோமர் 8:1-4; 2 கொரிந்தியர் 3:17-18). இயேசுவின் அன்பான தியாகத்திற்காகவும், பரிசுத்த ஆவியின் மூலம் நம்மில் இருப்பதற்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துவோம்!

என்னுடைய ஜெபம்

தேவனே , என்னில் ஓர் பரிசுத்த இருதயத்தை உருவாக்கி, உம் பரிசுத்த ஆவியின் மூலமாய் என்னுள் வசிப்பதன் மூலம் என்னைப் புதுப்பித்தருளும் . ஆவியானவர் என்னை தினமும் இயேசுவைப் போல மாற்றுவதால், நீர் விரும்பும் குணத்தைப் பெற உம் பரிசுத்த ஆவியின் மூலம் எனக்கு அதிகாரம் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து