இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவை நம் ஆண்டவராகக் கொண்டிருப்பதன் அர்த்தம், இந்த முக்கியமான நித்திய யதார்த்தத்தின் மூலம் நாம் மற்றவர்களின் மீது கடுமையான வார்த்தைகளை கூறவேண்டுமென்று அர்த்தமல்ல. சாந்தம், தாழ்மை போன்ற குணாதிசயங்களை உடையவர்கள் இயேசுவை ஆண்டவராகக் ஏற்றுக்கொண்டவர்கள் . எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு மற்றவர்களுக்காக மரிக்கும் அளவுக்கு அவர்களை நேசித்தார். இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களையும் , தாம் மரித்தபோது கேலி செய்தவர்களையும் மன்னிக்கும்படி பிதாவாகிய தேவனிடம் விண்ணப்பம் செய்தார். அத்தகைய ஆண்டவரை கொண்டிருப்பதினால் , அவர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையான சத்தியத்தை பகிர்ந்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்போது நாம் மறுஉத்தரவு சொல்லும்படி ஆயத்தமாய் இருக்கவேண்டும் . நம்மைச் சுற்றியுள்ளவர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம், ஆனால் பலர் இதுவரை அவர்கள் அறியாத ஒன்றைத் தேடுகிறார்கள். அவர்கள் இயேசுவைச் சந்திக்க சரியான நேரம் வரும்போது அவரை குறித்து அவர்களிடம் சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாய் இருப்போமாக.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் கிருபையுமுள்ள தேவனே , என்னைச் சுற்றியுள்ளவர்களுடன் இயேசுவின் அன்பைப் குறித்து பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளைப் பார்க்கும்படி எனக்கு ஞானத்தைத் தாரும் . இயேசுவை குறித்து எனது பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து, மீட்பின் வார்த்தையை பகிர்ந்துக்கொள்ளும்போது எனக்கு சாந்தமும், மனத்தாழ்மையும் தாரும் , அதினால் இயேசு தாம் ஊழியம் செய்தவர்களிடம் காண்பித்த அதே கனத்தையும் அடியேனும் அவர்களுக்குக் காண்பிக்க உதவியருளும் . என்னுடைய இரட்சகரரும், உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து