இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுடைய பரிபூரணம், நீதி, இரக்கம், கிருபை மற்றும் பரிசுத்தம் ஆகியவற்றை தோராயமாகவும் கூட மதிப்பிடுவதற்கு நம்மில் யாரும் நெருங்க முடியாது என்று ரோமர் 3 ஆம் அதிகாரத்தில் உள்ள கருத்தை பவுல் நமக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறார். எனவே நாம் அதை புரிந்துக்கொள்ளும் இடத்திற்கு எப்படி செல்வது? பாவத்தின் பிடியிலிருந்தும் அக்கிரமத்திலிருந்தும் நாம் எவ்வாறு தப்பிப்பது? தேவனானவர் நமக்கு அளித்த பதில் இயேசு! அதுவே நாம் மற்றவர்களுக்கு கூறும் பதிலாகவும் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்! இயேசு நம்மை பாவத்திலிருந்து மீட்க வந்தார் (மாற்கு 10:45), நாம் பாவிகளாக இருந்தபோதும் நம்முடைய பாவத்திற்கான மாபெரிதான விலையை செலுத்தினார் (ரோமர் 5:6-11). நாம் நம்முடைய நற்குணத்தினால் தேவனிடம் கிட்டி சேரும் வழியை நம்மால் சம்பாதிக்க முடியவில்லை, எனவே இயேசுவானவர் மீண்டும் நமக்கும் தேவனுக்கும் இடையே ஒரு பாலமாக மாறினார். புகழ்பெற்ற உண்மை இப்போது இதுதான்: நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5 :21)
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே , நான் ஜெபத்தில் உம் சமூகத்தில் வரும்போது என் பாவத்தை அறிக்கையிட்டு ஒப்புக்கொள்கிறேன். அன்பான பிதாவே, விசுவாசத்தினால், உம்முடைய நேச குமாரன் அவருடைய மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாய் எனக்காக என்ன செய்தார் என்பதை நான் முழுமையாய் விசுவாசிக்கிறேன் . அவருடைய கிரியையின் மீது என் நம்பிக்கையும், உமது கிருபையும் எனக்கு ஜீவன் தந்து என்னை பரிசுத்தமாக்கும் என்று நான் நம்புகிறேன் (கொலோசெயர் 1:22). உம்முடைய அற்புதமான கிருபையினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், உமது ஜெய குமாரனைப் போல வாழ என்னை ஆசீர்வதித்து, எனக்கு அதிகாரம் கொடுங்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.