இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் ஜீவன் உள்ளவராய் வாசம் செய்யும் போது, நாமெல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (2 கொரிந்தியர் 3:17-18). நாம் இயேசுவின் மீது முழு கவனத்தையும் செலுத்தி, அவரை அறிந்து, அவருடைய மாதிரியைப் பின்பற்றி, அவருக்காக தினமும் வாழும்போது இந்த மாற்றம் நமக்குள் ஏற்படுகிறது. இயேசுவின் மெய்யான சீஷர்களாகிய் நமக்கு இந்த மாற்றமே நம் வாழ்வின் குறிக்கோளாயிருக்க வேண்டும் (கொலோசெயர் 1:28-29; லூக்கா 6:40). நாம் மென்மேலும் இயேசுவைப் போல மறுரூபமாகும்போது, ​​அவருடைய குணத்தை வெளிப்படுத்துகிறோம், ஆவியின் கனிகளான அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இவைகளை பெற்றுக்கொள்ளுகிறோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , எனக்குள் இருக்கும் உமது பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி. உம் பரிசுத்த ஆவியின் மறுருபமாக்கும் பணிக்காக நான் உணர்வுபூர்வமாகவும் முழுமனதுடனே என் விருப்பத்தையும் இருதயத்தையும் ஒப்புவிக்கிறேன் . தயவுக்கூர்ந்து நீர் விரும்பும் கனிகளை கொடுக்கும்படி என்னை தயார் செய்யும் - உம்மை மகிழ்விக்கும் அக்கனியினாலே உம் குணாதிசயத்தை பிரதிபலிக்கவும் மற்றும் உமக்கு மகிமையை கொண்டுவரவும் உதவிச் செய்யும் . இயேசுவின் வல்லமையுள்ள அதிகாரத்தினால் உம் கிருபையை கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து