இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
அதிர்ஷ்டவசமாக, தேவனானவர் நம்மை நீதிமான்களாக்கும் பலியை நமக்கு கொடுத்து , நம்முடைய பாவங்களுக்கு இயேசுவை பலியாக செலுத்துகிறார், ஏனென்றால் நாம் யாரும் தேவனுடைய நியாயப்பிரமாண சட்டங்களை முழுமையாகவும் சரியாகவும் கடைப்பிடிக்கவில்லை. அவருடைய அளவற்ற கிருபையால், நம்மால் நடப்பிக்க முடியாததைச் செய்ய பரலோகத்தின் தேவன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்: ஒரு பரிபூரணமான வாழ்க்கையை வாழ்ந்தார் , ஒருபோதும் பாவம் செய்யவில்லை , மேலும் நம்முடைய பாவங்கள், மீறுதல்கள் மற்றும் கலகங்களுக்காக யாவற்றையும் சுமந்து ஒரு பரிசுத்த பலியாகத் தம்மையே ஒப்புவித்தார் . நம்முடைய பரிபூரணத்தையும் தேவனுடைய அங்கீகாரத்தையும் பெற முயற்சிக்கும் எந்தவொரு நியாயப்பிரமாண சட்டத்தின் கீழே ஒருபோதும் நாம் வாழ வேண்டிய அவசியமில்லை. மாறாக, நாம் "விசுவாசத்தினால்" வாழ்கிறோம், ஏனென்றால் கிறிஸ்துவின் பரிபூரணத்தின் மூலமாக தேவனானவர் நம்மைப் பார்க்கிறார் என்று நம்புகிறோம், நம்முடைய பெலவீனமான வாழ்க்கையை அல்ல. இயேசுவின் பரிசுத்தத்தின் அடிப்படையில் தேவன் நம்மை நியாயந்தீர்ப்பார் என்றும், நம்முடைய மீறுதல்கள் அல்ல என்றும், நம்முடைய அநீதியின் மூலம் அல்ல, மாறாக நேச குமாரனின் நீதியின் மூலமாக நம்மைப் பார்ப்பார் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம் . இவ்விதத்தில், "சட்டத்தின் சாபத்திற்கு" உட்படாமல், பரிசுத்த ஆவியானவரால் பெலப்படுத்தப்பட்ட விசுவாசத்தின் மூலம் தேவனுடைய சட்டத்தின் நீதிக்கான தேவைகளை நாம் நிறைவேற்றுகிறோம்.
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்தமான தேவனே , பாவம் மற்றும் மரணத்திலிருந்து என்னை மீட்டெடுத்து, உமக்காக வெற்றியுடன் வாழ எனக்கு வழி கொடுத்த உமது கிருபையின் திட்டத்திற்காக நன்றி. அன்பான பிதாவே , இயேசுவுக்கும், அவருடைய முன்மாதிரியான மற்றும் பரிசுத்த வாழ்க்கைக்கும், என் பாவங்களுக்காக அவர் செய்த கிருபையின் அன்பான தியாகத்திற்காகவும் நன்றி. நான் சொல்லும் வார்த்தைகளும், நான் வாழும் முறையும் உமது கிருபையால் என் இருதயத்தைக் கவர்ந்திருக்கிறது என்பதையும், இயேசுவின் மீதுள்ள மெய்யான விசுவாசம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது என்பதையும் பிரதிபலிக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே , உம்மை போற்றி புகழ்கிறேன். ஆமென்.