இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் எதை விரும்புகிறோமோ அதை தேவன் நமக்குத் தருவார் என்று இந்த வாக்குறுதியை தவறாகப் படிக்காமல் கவனமாக இருங்கள். இந்த வாக்குறுதியைத் தகுதிப்படுத்தும் அந்த முதல் அழுத்தமான சொற்றொடரைக் கவனியுங்கள்: "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு..." என் இருதயம் கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியாயிருப்பது போல - அவருடைய சித்தத்திலும் அவருடைய நோக்கங்களிலும் - நான் நிறைவேற்றும்போது அந்த அற்புதமான சத்தியம் கிரியை நடப்பிப்பதை காண்கிறேன்; அவர் நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறார். கர்த்தர் எதை விரும்புகிறார் என்று நான் ஏங்கும்போது, அவர் என் இருதயத்தின் விருப்பத்தை எனக்குக் கொடுத்து மகிழ்கிறார். ஒரு பழைய ஆங்கில பாடல் இந்த வரிகளை கொண்டுள்ளது : "தேவனின் இனிமையான விருப்பம், நான் உமக்குள் முழுமையாக மாறும் வரை என்னை இன்னும் நெருக்கமாக சேர்க்கிறீர் ." தேவனின் விருப்பத்தில் நம்மை இழக்கும்போது, நம் இருதயம் அவரைக் மகிமைப்படுத்த மகிழ்ச்சியடையும்போது , அப்பொழுது தேவன் நம் இருதயத்தின் விருப்பங்களை நமக்குக் கொடுத்ப்பதுமல்லாமல் அவருடைய குணாதிசயங்களை ஆசீரவாதமாய் நமக்கு கொடுக்க்வும் விரைகிறார்! கர்த்தரிடத்தில் மகிழ்சியாய் இருப்பது என்பது தேவனின் மகிழ்ச்சியான பிரசன்னம் மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த இருதயத்திற்கு வழிவகுக்கிறது!
என்னுடைய ஜெபம்
பரிசுத்த பிதாவே , எங்கள் முற்பிதாக்களின் தேவனும் , ஒவ்வொரு நன்மையான ஈவும் மற்றும் பரிபூரணமான வரமும் * வழங்குபவர், என்னை ஆசீர்வதிக்கவும், உமது கிருபையின் ஐசுவரியத்தை என் மீது ஊற்றவும் ஏங்குவதற்காக நன்றி. தயவு செய்து என் இருதயத்தைத் தொடவும், அதினால் உம் விருப்பத்தை விரும்பும், பின்னர் அதை உங்கள் மகிமைக்கு நிறைவேற்றும்படி தைரியமாக உம்மிடம் கேட்கும். இயேசுவின் நாமத்தினாலே மகிழ்ச்சியுடன் ஜெபிக்கிறேன். ஆமென். * யாக்கோபு 1:17.