இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சபையும், கிறிஸ்தவ வாழ்க்கையையும் கட்டியெழுப்ப ஒரே ஒரு அஸ்திபாரத்தின் மாத்திரமே உள்ளது. அந்த அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவே (1 பேதுரு 2:4-7; எபேசியர் 2:20). நம்மை இரட்சிக்க தேவன் அனுப்பியவர் அவரே (யோவான் 3:16). அவரே "வழியும், சத்தியமும் , ஜீவனுமாய் இருக்கிறார் " மற்றும் தேவனிடம் நாம் சேரும் ஒரே வழியாய் வாசலாய் இருக்கிறார் (யோவான் 14:6). எல்லா நாமங்களுக்கும் மேலான நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே , ஒவ்வொரு முழங்கால் யாவும் முடங்கும்படியாக (பிலிப்பியர் 2:5-11), அந்த நாமமேயல்லாமல் இரட்சிக்கப்பட வேறோரு நாமம் கட்டளையிடப்பட வில்லை (அப் 4:12). இயேசுவை ஆண்டவராகக் கருதி நம் இருதயங்களினாலும் , வார்த்தைகளிளாலும், செயல்களினாலும் இன்று நேரத்தை ஒதுக்கி கனப்படுத்துவோம் . எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனோடு நம்மை நித்திய காலமாக வாழ்வதற்கு அஸ்திபாரம் அமைத்தவர் இயேசுவே!

என்னுடைய ஜெபம்

ஆண்டவராகிய இயேசுவே, இதுவரை தெரிந்துக்கொள்ளப்பட்ட எல்லா நாமங்களிலும் உம்முடைய நாமமே மேலானது. இந்த உலகமும் அதில் உள்ள யாவும் உண்டாவதற்கு முன்பும், அவர் உண்டாக்கின சூரியனின் ஒளி இருள் அடைந்த பின்னரும் அவருடைய மகிமை சதாக் காலங்களிலும் நிலைத்திருக்கும். எங்களை இரட்சித்த உம்முடைய தியாக அன்பும்,இரக்கமும் ஒப்பிட முடியாதது. தயவுசெய்து எங்கள் மனமார்ந்த துதி ஸ்தோத்திரங்களையும் பாராட்டுகளையும் அங்கிகரித்தருளும் . எங்களை இரட்சிக்க நீர் என்ன செய்தீர்களோ, ஒரு நாள் எங்களை மறுபடியுமாய் உம்மோடு அழைத்து சென்று , பிதாவோடும் கொண்டு சேர்க்க நீர் என்ன செய்வீர்கள் என்பதற்காக எல்லா மகிமையும், மகத்துவமும், வல்லமையும் , கிருபையும் உமக்கே சொந்தம். உம்மை துதித்து போற்றுகிறோம் நன்றி செலுத்துகிறோம் ! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து