இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில நேரங்களில் நம்முடைய விண்ணப்பத்திற்கு உடனடி பதில்கள் இல்லை. நாங்கள் ஜெபித்தோம், அழுதோம், முயற்சித்தோம், கண்ணுறங்காமல் இருந்தோம் , துக்கித்தோம் மற்றும் கூச்சலிட்டோம். இன்னும், எங்களால் பதில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. துயரத்தினாலும் வேதனையினாலும் நாட்கள் வேகமாய் கடந்துப்போயின . ஆனாலும், தேவனின் சத்தத்தை இன்னும் நம்மால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் சங்கீதப் புத்தகத்தை நோக்கி பார்ப்போம். எங்களுடைய துயரமான இருதயத்தை உற்சாகப்படுத்தும்படி அதையே செய்வோம் . நாம் இந்த உலகம் யாவற்றையும் உண்டாக்கின தேவனுடன் உண்மையுடன் இருந்து , அவரிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்கிறோம். நம்முடைய மிகவும் சவாலான பிரச்சனைகளில் கூட, அவர் நமக்குச் செவிசாய்ப்பார் என்பது மட்டுமல்லாமல், நம் வாழ்வில் என்ன நேரிடுகிறது என்பதைப் பற்றியும் அவர் கவலைப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, வியாதியை குணப்படுத்தும் ஒரே மெய்யான பரிகாரரே , நொறுக்கப்பட்ட இருதயங்களை குணப்படுத்துபவரே , அடியேன் நேசிக்கும், உம்முடைய உதவி மிகவும் அவசியம் என்றியிருக்கும் மக்களின் அழுகையை தயவுசெய்து இன்றே கேளுங்கள். உமது சித்தம் அவர்கள் வாழ்வில் மென்மையுடனும் கிருபையுடனும் நிறைவேறட்டும். உம் மாறாத சமூகத்தை அவர்கள் அனுபவிக்க உதவியருளும் . ஆண்டவரே, தயவுகூர்ந்து எப்பொழுதும் என் அருகில் இருங்கள், அதனால் அவர்களின் ஜெபங்களுக்கு உம் பதிலைக் காண நான் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். என்றென்றும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து