இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய சித்தத்திற்கு நம் இருதயத்தை செம்மைப்படுத்தி, நம் ஆண்டவரைக் கனப்படுத்த நாம் ஏங்கும்போது, ​​மாட்சிமையான வழிகளில் நம்மை ஆசீர்வதிப்பதில் நம் பிதா மகிழ்ச்சியடைகிறார். (நேற்றைய பக்தி எண்ணங்களைப் பார்க்கவும்.) எனவே, அவருடைய சித்தத்தைச் செய்வதில் முதலில் நம் இருதயத்தை அமைத்துக் கொள்வோம். அப்படியானால், தேவனின் ஆசீர்வாதங்களை மற்றவர்கள் மீது பொழிந்து , நம் இருதயத்தின் விருப்பங்களை தேவனிடம் பகிர்ந்து கொள்ளும்படி கேட்க பயப்பட வேண்டாம். இறுதியாக, நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் நம்மை எத்தனை வழிகளில் ஆசீர்வதிக்கிறார் என்பதில் ஆச்சரியப்பட வேண்டாம்!

என்னுடைய ஜெபம்

தேவனே , நீர் என்னை ஆசீர்வதிக்கும் விதத்தில் , குறிப்பாக நான் நேசிக்கிறவர்களை ஆசீர்வதிக்கும் வழிகளில், தயவுசெய்து நீர் மகிமையுடையவர் என்பதை காண்பியும் . இந்த ஆசீர்வாதங்கள் எங்களின் ஞானத்தினாலோ, திறமையினாலோ அல்லது பலத்தினாலோ அல்ல, உமது கிருபையினால் வந்தவை என்பதை எல்லா மக்களுக்கும் அறிய உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே இவை யாவற்றையும் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து