இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாங்கள் கிறிஸ்துவை உடையவர்கள் என்றால், தேவனுடைய ஆவி எங்களுக்குள் வாசம் செய்யும் என்பதை அறிவோம் (ரோமர் 8:9). அந்த ஆவியின் பிரசன்னத்தினால், நாம் நித்தியமானவர்கள் என்பதையும் அறிவோம்! ஆவியானவர் நமக்கு தேவனின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் அவருடன் இருக்கிறது என்பதற்கு ஓர் உத்தரவாதத்தை அளிக்கிறார் (2 கொரிந்தியர் 1:21-22; 2 கொரிந்தியர் 5:5). மேலும், நாம் இப்போது கிறிஸ்துவுக்காக வாழும்போது , ஆவியானவர் நம் சரீரங்களை தேவனின் மகிமைக்காகப் பயன்படுத்தும்போது, அவற்றை நிச்சயமாக உயிர்ப்பிக்கிறார் என்பதை அறிவோம் (ரோமர் 12:1). ஆவியானவர் நம்முடைய சரீர மரணத்திலிருந்து நம்மை எழுப்பி, அழியாத மேனியோடே தேவனுடைய நித்திய பிரசன்னத்திற்கு நம்மைக் கொண்டுவரும் வரை அவர் இதை நடப்பிப்பார் (1 கொரிந்தியர் 15:50-58).
என்னுடைய ஜெபம்
பிதாவே, தயவுக்கூர்ந்து உமது பரிசுத்த ஆவியினால் என் மாம்ச சரீரத்தை உயிர்ப்பித்தருளும் , அப்பொழுது நான் கையிட்டு செய்வது உமக்கு மகிமை கொண்டுவருவதுமல்லாமல் , உமது குணத்தையும் கிருபையையும் பிரதிபலிக்கும் . என்றென்றும் உம்முடன் இருக்கும்படி, அழியாத என் சரீரத்துடன் என்னை எழுப்பும் வரை, உமது பரிசுத்த ஆவியால் என்னை வலுப்படுத்தி, மறுரூபமாக்குங்கள் . பிதாவே , உமது மாறாத பிரசன்னத்திற்காகவும் , உம்முடைய பிள்ளையாகிய எனக்குள் செயல்படும் உம் வல்லமைக்கு எப்பொழுதும் மகிமை உண்டாவதாக. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.