இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மனித எதிரிகளுக்கு பயப்பட வேண்டாம் என்று இயேசு சொன்னார் (லூக்கா 12:4-5). நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்த முயற்சிக்கும்போது, ​​மற்றவர்கள் நமக்கு என்ன சொல்வார்கள் அல்லது என்ன செய்வார்கள் என்று பயப்படும்போது, ​​தேவையற்ற பாதிப்புக்குள்ளாகிவிடுகிறோம். நம் வாழ்க்கை இனி நமக்குச் சொந்தமாக இருக்காது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், விரும்புகிறார்கள் அல்லது அச்சுறுத்துகிறார்கள் என்பதற்கு நாம் சிறைபிடிக்கப்படுகிறோம். நாம் தேவனை மட்டுமே நம்பி அவரை தொழுதுக்கொள்ள வேண்டும். பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. (1 யோவான் 4:18). நாம் உறுதியாக கர்த்தர் பேரில் நம்பிக்கை வைக்கும்போது, ​​பரலோகத்தின் தேவன் நம்முடைய பாதுகாப்பாய் இருக்கிறார், இப்போதும் இன்னுமாய் என்றென்றுமாய் இருப்பார் .

என்னுடைய ஜெபம்

பிதாவே , என்னை எதிர்ப்பவர்களிடமிருந்தும் எனக்கு தீங்கு விளைவிப்பவர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றியருளும் . என் எதிரிகள் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும், என்ன விமர்சித்தாலும், என்ன அச்சுறுத்தினாலும், இயேசுவுக்காக வாழவும், நேர்மையான குணம், கிருபை நிறைந்த இரக்கம், உண்மையுள்ள அன்புடன் வாழ எனக்கு தைரியத்தைத் தாரும் . என் வாழ்வு உமக்கு பரிசுத்த புகழாக அமையட்டும். இயேசுவின் நாமத்தின் மூலமாய் அடியேன் , என் ஸ்தோத்திரத்தையும் , இந்த ஜெபத்தையும் சமர்ப்பிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து