இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வாக்கியத்தில் பல ஆழமான மற்றும் கவர்ச்சிகரமான கருத்துகள் இருந்தாலும், என் இருதயத்தைத் தொடும் ஒரு வாக்கியம் இதுதான்: "...அவர்கள் தம்மோடுகூட இருக்கவும்...." இந்த வாக்கியம் ஒரு சிறந்த வசனப் பகுதியை எனக்கு நினைப்பூட்டுகிறது: "பேதுரு மற்றும் யோவான் , அவருடைய அப்போஸ்தலர்கள்] இயேசுவோடு இருந்ததை சனகரிப்பு சங்கத்தின் தலைவர்கள் அங்கீகரித்தார்கள்" (அப்போஸ்தலர் 4:13). பன்னிரண்டு அப்போஸ்தலர்களைப் போலவே அதாவது மாம்ச பிரகாரமாக நாம் இயேசுவோடு இருக்க முடியாது என்பதை இப்போது நான் அறிவேன். இருப்பினும், நாம் நான்கு நற்செய்திகளை (மத்தேயு, மாற்கு , லூக்கா மற்றும் யோவான் ) வைத்திருக்கிறோம், அவை அவருடைய வரலாற்றை சொல்கிறது மற்றும் இயேசுவைப் பின்பற்ற நம்மையும் அழைக்கின்றன. நாம் இயேசுவைப் பின்பற்றி செல்லும்போது , ​​பரிசுத்த ஆவியானவர் நம்மை அவரைப் போல் மாற்றுகிறார் (2 கொரிந்தியர் 3:18). அப்படியென்றால், நீங்கள் கடைசியாக எப்போது உட்கார்ந்து வேதாகமத்தை படித்தீர்கள்? நீங்கள் கடைசியாக ஒரு சுவிசேஷ புத்தகத்தை படித்து, இயேசுவிடம் அவரையும், அவருடைய விருப்பத்தையும் உங்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டது எப்போது? உங்கள் வேலைகளை விலக்கி இந்த வாரம் இயேசுவுடன் ஏன் சிறிது நேரம் செலவிடக்கூடாது? யாருக்குத் தெரியும், ஒருவேளை நீங்கள் நேரத்தை செலவு செய்து இயேசுவோடு இருந்திருப்பதை உங்களைச் சுற்றியுள்ள யாராவது ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளலாம் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, நீர் அளித்த பரிசுத்த வேத வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி. குறிப்பாக உம்முடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே நடப்பித்த எல்லா வரலாற்று சம்பவங்களை சொல்லும் நற்செய்திகளுக்காக உமக்கு நன்றி. அவரை நன்கு தெரிந்துகொள்ள அதிக நேரம் செலவிடாததற்கு என்னை மன்னியுங்கள். உம்முடைய நேச குமரனைப் பற்றி அறிந்துக்கொள்ள தேடுவதற்கு நான் என்னை மீண்டும் ஒப்புக்கொடுக்கும்போது, ​​அவருடைய பிரசன்னத்தைப் பற்றிய உண்மையான உணர்வையும், அவருடைய சித்தத்தையும் , அன்பு, குணாதிசயம் , நீதி மற்றும் இரக்கத்தைப் பற்றிய தெளிவான அறிவையும் எனக்கு அருள்வாயாக. பிதாவே, நான் இயேசுவோடு இருக்கிறதை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்! அவர் நாமத்தினாலே , நான் இந்த கிருபையை கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து