இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வசனப் பகுதி என்னைக் தேவனை நோக்கி கூக்குரலிடத் தூண்டுகிறது: தேவனே, "தயவுக்கூர்ந்து எங்களை திருப்பிக் கொண்டு வாரும் ! தேவனே, உமது மக்களாகிய எங்களை திருப்பிக்கொண்டுவாரும் , ஏனென்றால் நாங்கள் ஆச்சரியத்தின் உணர்வை இழந்துவிட்டோம்! எங்களுடைய ஆத்துமாவிலே விடாய்த்து போன இருதயங்களை மறுபடியுமாய் புதுபித்தருளும் . எங்களுடைய ஜீவனை பரிசுத்தமான மற்றும் முழுமையான எண்ணத்திற்கு திரும்பக்கொண்டு வாரும் . சர்வவலமையுள்ள தேவனே , எங்களை மறுபடியுமாய் உம்மிடத்தில் திருப்பியருளும் !" கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொரு சகோதரனும், சகோதரியும் தனது ஆச்சரிய உணர்வை இழக்கவில்லை என்றாலும், நம்மில் அநேகருக்கு இந்த பழைய வாடிய இருதயம் இல்லை என்றாலும், நம்மைப் புதுப்பிக்கவும்,நாம் காப்பாற்றப்படவும் வேண்டுமென்றால் நம் அனைவருக்கும் தேவனுடைய மாறாத பிரசன்னத்தின் ஒளி நம்மீது பிரகாசிக்க வேண்டியது தேவையான ஒன்று !

என்னுடைய ஜெபம்

தேவனே , புதிய காரியங்களை சிருஷ்டிப்பவரே , அடியேன் அநேக வேளைகளில் மிகவும் பெலனற்றவனாகவும் , தோய்ந்தவனாகவும் உணர்கிறேன்; என்னுடைய ஆத்துமா போராட பெலனற்று சோர்வாக இருக்கிறது. அடியேனை நிலைவரப்படுத்த உம்முடைய சமூகமும், பெலனும் எனக்கு தேவை . தயவுக்கூர்ந்து அடியேனை மறுபடியுமாய் உம்முடைய பக்கமாய் மீட்டெடுத்து உமது கிருபையை என்னில் விளங்கச்செய்யும் . தயவுசெய்து என்னை உம்முடைய பூரண அனபிலே மறுபடியும் நிலைவரப்படுத்தி , என் மூலமாய் அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து உம்முடைய நீதியின் படி அடியேனை மீட்டெடுப்பதினால் மற்றவர்கள் என்னில் உள்ள உம்முடைய குணாதிசயத்தை காணமுடியும். தயவுசெய்து என்னை திருப்பிக்கொண்டு வாரும் , என்னை மாத்திரமல்ல; உம்முடைய மகத்தான நாமத்தை சொல்லிக் கூப்பிடும் அனைவரையும் திரும்பக் கொண்டுவருவீராக . உலகம் உம்மை எங்களில் காணவும், உமது இரட்சிப்பின் கிருபையை அதின் மூலமாய் அறியவும் நாங்கள் விரும்புகிறோம். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து