இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய வரலாற்றை பழைய ஏற்பாட்டில் பார்க்கும்போது அவரது மக்களான இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய வழியை விட்டு வழிதவறி நடக்கிற மனப்பான்மை கொண்டிருந்தபோதிலும், அவர்களுக்கு தேவன் வெற்றி, பாதுகாப்பு மற்றும் உண்மையுள்ளவராய் இருந்தார் . பழைய ஏற்பாட்டில் தேவன் இஸ்ரவேலர்களோடு இருந்ததுபோல, இன்று தேவன் நம்மோடும் இருக்கிறார். தேவன் நம்மை கவனித்துக்கொள்கிறார். தேவன் நம் ஜெபங்களை கேட்கிறார். தேவன் நம்மை ஆசீர்வதித்து பாதுகாக்க விரும்புகிறார். தேவன் நம்மைப் பெலப்படுத்தி ஆதரிக்க விரும்புகிறார். அவர்மீது நம்பிக்கை வைப்போம், அவர் தம்முடைய "நீதியின் வலது கரத்தால்" நம்மைத் தாங்குவார் என்று நம்புவோம்.

என்னுடைய ஜெபம்

சிருஷ்டிப்பின் தேவனே , நீயே என் தேவன் . நான் உம் மீது முழு நம்பிக்கையையும் வைக்க விரும்புகிறேன் ! நான் உமக்கு கனமும் மகிமையும் கொண்டு வர ஆசைப்படுகிறேன். எனவே, உமக்கு வெற்றியுடனும் ஆர்வத்துடனும் வாழ என் தைரியத்தை பெலப்படுத்தும் . நான் உமது குணத்தை வெளிப்படுத்தி உம் மகிமைக்காக வாழும்போது, ​​என்னுள்ளும், என்னைச் சுற்றிலும் உம் வல்லமைமிக்க கரத்தாலும் என்னைப் பலப்படுத்தி, நிலைநிறுத்துவீர் என்று நம்புகிறேன். ஆண்டவரே, உம்மில் என் முழு நம்பிக்கையையும் வைத்துள்ளேன். இயேசுவின் நாமத்தினாலே, உமக்கு மகிமையையும், கனத்தையும் செலுத்தி, என் விசுவாசத்தோடே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து