இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஆதாமையும், ஏவாளையும் பாவம் செய்யத் தூண்டிய சர்ப்பத்தின் மீது தேவனின் வார்த்தைகள் சாபமாய் இருந்தது . சர்பத்தின் ரூபத்தின் பின்னால் இருந்தது சாத்தான் . இந்த சாபத்தில் கூட, ஸ்திரியின் சந்ததிக்கும் சாத்தானுக்கும் இடையிலான போராட்டத்தில் கூட, தேவனின் ஒரு காலத்தில் பரிபூரணமான உலகில் உண்டாகப் போகும் அழிவு மற்றும் சிதைவின் போது கூட, கர்த்தர் நமக்கான சிறந்த எதிர்காலத்திற்கான வாக்குறுதியை வைத்திருக்கிறார் . அந்த எதிர்காலம் இயேசுவுக்குள் நமக்கு வருகிறது! இயேசு சிலுவையில் மரித்த போது நடந்த போரில் சாத்தான் வெற்றி பெற்றதாக தோன்றுகிறது , ஆனால் மூன்று நாளைக்கு பிறகு, அவருடைய உயிர்த்தெழுதல் எல்லாவற்றையும் மாற்றியது. மரணத்தின் மீதான இயேசுவின் வெற்றி, சாத்தானானவன் இயேசுவுக்கோ நமக்கோ மரணத்தை இறுதி வார்த்தையாக ஆக்குவதற்கு சக்தியில்லாமல் போய்விட்டது. நம்மீது சாபத்தைக் கொண்டு வருவதற்கான தீயவனின் மிகத் தந்திரமான திட்டம், இயேசுவின் வெறுமையான கல்லறையின் வாசலில் நசுக்கப்பட்ட தலையுடன் பழைய சர்பமாகிய சாத்தான் விடப்பட்டான் !
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே , நித்திய மரணத்தினால் உண்டாகும் துர்நாற்றத்தை அகற்றி, எனது எதிர்காலத்திற்கான உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக நன்றி. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், நீர் என்னை எழுப்பி, உமது சமூகத்திலே என்றென்றும் வாழும்படியாய் ஒரு வாழ்கையை தருவீர் என்றும் நான் முழுநிச்சயமாய் நம்புகிறேன். இந்த நிலையான வெற்றிக்காக, நான் உம்மை இயேசுவின் நாமத்தினாலே துதிக்கிறேன். ஆமென்.