இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பவுலின் இந்த வார்த்தைகள் மிகவும் தீவிரமானவை. அவர் இந்த வார்த்தைகளை எழுதியபோது, மகன்களுக்கு இருந்த மரியாதை மற்றும் வாரிசு உரிமைகள் பெண்களுக்கு அந்த காலத்தில் இல்லை. எவ்வாறாயினும், இந்த வசனம், இயேசுவைப் பின்பற்றுபவர்கள், ஆண்களாயிருந்தாலும் சரி அல்லது பெண்களாயிருந்தாலும் சரி அனைவருக்கும் குமாரனின் உரிமை மற்றும் வாரிசுரிமைக்கான உரிமைகள் இருப்பதாக நமக்கு அறிவிக்கிறது. வாரிசுகளுக்கான அனைத்து உரிமையும் மற்றும் மரியாதையும் கிடைக்கிறது ஏனென்றால் நாம் தேவனின் பிள்ளைகள் ! நம்முடைய ஞானஸ்நானத்தின் மூலமாய் வெளிப்படும் நம்முடைய விசுவாசம், நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று இவ்வுலகிற்கு அறிவிக்கிறது. நாம் இளைஞரா அல்லது முதியவர்களா, பணக்காரரா அல்லது ஏழையா, ஆணா அல்லது பெண்ணா, அடிமையா அல்லது சுதந்திரரா எப்படி இருந்தாலும் பரவாயில்லை; கிறிஸ்துவையும் அவருடைய நீதியையும் அணிந்துகொள்ளத் தேர்ந்தெடுத்தோம். நம்முடைய சொந்த இரட்சிப்பைச் சம்பாதிப்பதில் நாம் சார்ந்திருக்கவில்லை. இது நமது வாரிசுரிமையுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அவரே நம் இரட்சிப்பு மற்றும் நம்பிக்கை. அவரே நமது ஜீவன் மற்றும் பெலன் . அவரே எங்கள் மூத்த சகோதரர் மற்றும் இரட்சகர். அவரே நம் ஆண்டவரும் ஆவார .
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , என்னை உம் குடும்பத்தில் ஏற்றுக்கொண்டதற்காக நன்றி. என்னை உமது பிள்ளையாகவும் , உம மகிமையுள்ள கிருபைச் செல்வத்திற்கு சரியான வாரிசாகவும் ஆக்க நீர் செய்த அனைத்திற்காகவும் நான் எப்படி நன்றி சொல்ல முடியும்? அன்புள்ள இயேசுவே, என்னை உம் குடும்பத்தில் சேர்த்த உம்முடைய தியாகத்திற்காக நன்றி. இயேசுவே, உம்முடைய நாமத்தின் மூலமாய் என் ஜெபத்தையும் என் துதியையும் செலுத்துகிறேன். ஆமென்.