இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கடந்த இரண்டு வாரங்களாக, நம் வாழ்கையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை குறித்து பேசும் அநேக வேதவசனங்களைப் படிக்கும் பாக்கியத்தை பெற்றோம். கடந்த சில நாட்களாக, நாம் தேவனின் அன்புக்குரிய பிள்ளையாக , நம் மூத்த குமாரனின் அனைத்து உரிமைகளையும், நம் பிதாவின் முழு சம்பத்தையும் பெற்றதை எண்ணி கொண்டாடி வருகிறோம். இரண்டு கருத்துக்களும் இன்று ஒன்று சேர நம் வசனத்தில் மகிமையான அறிவிப்பாக வந்துள்ளது : நாம் தேவனின் "புத்திரர்," முழு பரம்பரை உரிமைகள் கொண்ட அவருடைய பிள்ளைகள் . நாம் ஆண்களா, பெண்ணா, இளைஞரா, பெரியவரா என்பது முக்கியமில்லை. நம் இனம் முக்கியமில்லை. நம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் கிரியை மற்றும் அவர் பிரசன்னத்தின் காரணமாக, நாம் அவருடைய பிள்ளைகள், உரிமையுள்ள வாரிசுகள். நமக்கு கிருபை மாத்திரம் கொடுக்கப்படாமல் , அவருடைய பிள்ளைகளாக வாழ்ந்து, அவருடைய நித்திய குடும்பத்தின் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கிறோம்.
என்னுடைய ஜெபம்
அன்பான பரலோகத்தின் பிதாவே , உமது பிள்ளையாகிய என் வாழ்வில் உமது நாமம் பரிசுத்தமானது என்று அங்கீகரிக்கப்படும். வானத்தின் சேனைகள் அதைக் கனம்பண்ணுவது போல, உமது சித்தமும் , உமது ஆட்சியும் என் வாழ்வில் தெரியட்டும். பிதாவே , இன்று எனக்குத் தேவையான உணவைத் தருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன் . எனக்கு எதிராக பாவம் செய்பவர்களை மன்னிக்க நான் உறுதியளிக்கும் போது, தயவுசெய்து என் பாவத்தையும் மன்னித்தருளும் . அன்பான பிதாவே நீர் மகிமை பெற்றவர் . உம்முடைய ராஜ்ஜியம் நித்தியமானது மற்றும் அதுவே என் இருதயத்தின் குறிக்கோளாகும் . உமது வல்லமை என் வலிமையின் ஆதாரம். அன்பான பிதாவே நான் உம்மை முழு மனதோடே நேசிக்கிறேன் . உம்மை நேசிக்கும் அன்பின் குமாரனாக இயேசுவின் நாமத்தினாலே உம்மை ஸ்தோத்தரித்து ஜெபிக்கிறேன். ஆமென்.