இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பாத்திரராயிருக்கிறீர்! என்ன அழகான வார்த்தை! இயேசுவின் சீஷர்களாகிய நாம், மெய்யாகவே பாத்திரரான ஒருவரை மாத்திரமே அறிவோம். புஸ்தகத்தைத் திறந்து வருங்காலங்களை வெளிப்படுத்த அவர் பாத்திரராயிருக்கிறார். அவரே துதிக்கும், கனத்துக்கும்,மகிமைக்கும் உரியவர். ஏன்? ஏனென்றால், அவர் பரிசுத்தராகவும், பரிபூரணமாகவும், பரலோகத்தில் வாசம்செய்கிறவராய் இருந்தபோதிலும், நம்முடைய பாவங்களுக்கும், குற்றங்களுக்குமான,மீறுதல்களுக்காக மன்னிப்பையும், இரட்சிப்பையும் வாங்குவதற்காக அவர் சிலுவையில் தம்மை தாமே விலையாக கொடுத்து மரித்தது அவரை அதற்கு தகுதியுடையவராக்கியது. அவர் அதை நமக்காக மாத்திரமல்ல , அனைத்து இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களுக்காகவும் அப்படி செய்தார். இயேசுவே, நீர் எல்லா துதிகளுக்கும் பாத்திரர் , உலக இரட்சகரே உமக்கே எல்லா துதியும் மகிமையும் கனமும் புகழ்ச்சியும் உண்டாவதாக (யோவான் 4:42).

என்னுடைய ஜெபம்

தேவனுடைய பரிசுத்த ஆட்டுக்குட்டியானவரே , நீர் பாத்திரர்! நீர் என் அன்பிற்கும் கனத்திற்கும் தகுதியானவர். என் துதிக்கும், என் பயபக்திக்கும் தகுதியானவர் நீரே . மேலும் பரிசுத்த பிதாவே , எங்களை இரட்சிக்க அவரை அனுப்புவதற்கான உம் அநாதி தீர்மானத்திற்காக நன்றி. இயேசுவின் மூலமாய் உமது கிருபையை பெற்றுக்கொண்டதின் காரணமாக, உமக்கும் உம் சித்தத்திற்கும் பயத்துடனும், பக்தியுடன் என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நான் வழிதவறிய நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள். உம்முடைய மாபெரிதான அன்பிற்காக நன்றி, அதனால் நான் மறுபடியுமாய் தேவனிடமாய் திரும்பி நித்தியத்தை உம்முடன் பகிர்ந்து கொள்ள முடியும். என் பாவங்களுக்காக கொல்லப்பட்ட பரிசுத்த ஆட்டுக்குட்டியின் நாமத்தினாலே நான் உமக்கு எனது நன்றிகளையும், துதிகளையும், அன்பையும், நன்றியையும் செலுத்துகிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து