இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பிரசங்கம் மற்றும் பிரசங்கியார்களை விமர்சிப்பவர்கள் சிலர், "நான் எந்த நாளிலும் ஒரு பிரசங்கத்தைக் கேட்பதை விடப் பார்ப்பேன்" என்று கூறுகிறார்கள். மக்கள் "ஒரு பிரசங்கத்தைப் பார்க்க" விரும்புவதால் நான் வருத்தப்படவில்லை. பிரசங்கம் செய்பவர்களின் வாழ்க்கை அவர்கள் பிரசங்கிப்பதற்கு இசைவாக இருக்க வேண்டும். சிலர் "அவர்கள் பிரசங்கிப்பதை நடைமுறைப்படுத்துவதில்லை", மேலும் அவர்களின் மாயமாலம் நமது விமர்சகர்களின் காதுகளில் கிறிஸ்துவை பற்றிய செய்தியை இழிவுபடுத்துகிறது. ஒரு போதகரின் வழிநடத்துதலில் மிகவும் அவசியமான அல்லது முதன்மையான கருவியானது அவருடைய விசுவாசமுள்ள , பண்பு நிறைந்த மற்றும் மனஉருக்கமுள்ள வாழ்க்கை முறையாகும் . ஒரு தலைவர் அரசியலிலும், வியாபாரத்திலும், சபையிலும் அல்லது குடும்பத்திலும் பணியாற்றினாலும், ஆவிக்குரிய வழிநடத்துதல் மிகவும் அவசியம்! இயேசுவை போன்ற ஒரு வாழ்க்கையை நோக்கி மற்றவர்களை வழி நடத்த முயல்பவர்கள் அனைவரும் நாம் பிரசங்கிப்பதை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏன்? ஏனென்றால், பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பு செய்தியைக் கேட்கவும் அதை நம் வாழ்க்கையில் பார்க்கவும் வேண்டும்.
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , தயவுசெய்து என்னை மன்னித்து, என்னை ஆயத்தப்படுத்தி, உமது ஊழியத்துக்கு என்னைத் தகுதியாக்குங்கள். அன்பான பிதாவே, நான் மற்றவர்களை இயேசுவுக்கும் இயேசுவைப் போல மாறுவதற்கு வழிநடத்த முற்படுகையில், நான் பின்பற்றத்தக்க ஒரு வாழ்க்கையை வாழ முயற்சிக்கும்போது தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நான் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் பெலத்தையும், ஒத்தாசையையும் கேட்கிறேன், ஏனென்றால் ஆவியின் வல்லமையும் கிருபையும் என் வாழ்க்கையை மாற்றியமைக்காமல் நான் விசுவாசத்துடனும், நற்குணத்துடனும், இரக்கத்துடனும் வழிநடத்த முடியாது. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.