இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாய் உணவு, அவதுரான வார்த்தை மற்றும் புறங்கூறுதல் போன்ற காரியங்களினால் நிரப்பப்படலாம். அல்லது தேவனுக்காகவும், அவருடைய அன்பான கிருபைக்காகவும் நம் வாயினால் அவரை துதிக்கப்படுவதைத் தேர்ந்தெடுக்கலாம். பல்வேறு தலைப்புகளில், பற்ப்பல விஷயங்களைப் குறித்து அநேகரிடம் நாம் சம்பாஷிக்கலாம் . அல்லது நம்முடைய பரலோகத் பிதாவின் மாபெரிதான சிறப்புகளையும், மகத்துவத்தையும், மகிமையையும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அவைகளை அறிவிப்பதற்கு நாம் தேர்வு செய்யலாம். நம்முடைய அனுதின வாழ்க்கை ஜீவியத்தில் அவரை நம் வாயினால் தேவனை துதித்து இன்னுமாய் அவருடைய மகிமையின் பிரஸ்தாபத்தையும், கிருபையையும் பற்றி மற்றவர்களுக்குத் நம் வாயின் வார்த்தைகளினால் தெரியப்படுத்தவும் கூடாதா ? பிறகு, நம்முடைய நாளின் முடிவில் அதாவது , நாம் உறங்கும் முன் இறுதியாக ஒரு முறை தேவனை மகிமைப்படுத்தலாம், "என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக !"

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள மற்றும் அற்புதமான பிதாவே , நீர் எல்லா சிருஷ்டிப்புக்கும் , இரக்கங்களுக்கும் , அன்புக்கும் மற்றும் கிருபைக்கும் pதேவனே . இயேசுவின் மூலமாய் என்னுடன் நீர் பகிர்ந்து கொண்ட உம் அன்பிற்காக உமக்கு நன்றி. நீர் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பியபோது மரணத்தின் மீதான உம் மாறாத வெற்றிக்காக உமக்கு நன்றி. என் வாழ்க்கையில் இயேசுவின் தன்மையை இன்னும் முழுமையாக பிரதிபலிக்க நான் விரும்பினாலும், சில சமயங்களில் நான் தடுமாறும்போது என் மீது பொறுமையாய் இருந்ததற்காக நன்றி. ஆண்டவரே, இந்த நாளில் நீர் செய்யும் அனைத்திற்காகவும் எனது அன்பான போற்றுதலை வெளிப்படுத்தவும் காண்பிக்கவும் எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து