இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் எத்தனை அதிகமாய் நம் தேவனை நம்புகிறோம்? நாம் எவ்வளவு முழுமையாய் நம்மை தேவனிடம் ஒப்படைத்துள்ளோம்? கர்த்தர் நமக்கு அளிக்க விரும்பும் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை குறித்து கடந்த சில நாட்களாக கவனம் செலுத்தினோம். ஆனாலும், தேவன் சில சமயங்களில் இந்த ஆசீர்வாதங்களை அவர்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் மற்றும் அவரிடம் நாம் கேட்பதையும் சார்ந்து அதை கொடுக்க சித்தமுள்ளவராய் இருக்கிறார் . நம் வாழ்க்கையின் பாதையை நம்முடைய ஞானத்தை கொண்டு நாம் விரும்பும் திசையில் நடத்தி செல்லும் வரை, தேவன் நம்மை அவருடைய ஆசீர்வாதங்கள் மற்றும் அவருடைய விருப்பத்தின் திசையில் அழைத்துச் செல்வது மிகவும் கடினம். நான் ஒருமுறை ஒரு வாகனத்தில் உள்ள ஸ்டிக்கரைப் பார்த்தேன்: " தேவனானவர் உங்கள் வாகனத்தின் துணை வாகன ஓட்டி என்றால், நீங்கள் உங்கள் இருக்கைகளை மாற்றுவது மிகவும் நல்லது!" கர்த்தருக்கு நம் வழியை ஒப்புவிப்பது என்பது நம் வாழ்க்கையை அவருடைய ஊழியத்தை செய்வதற்கும், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும், அவருடைய பிரசன்னத்தை அறிந்து கொள்வதற்கும் வழி வகுக்கும் . நாம் எதற்காக காத்திருக்கிறோம்? நம் வாழ்வின் மாலுமியின் இருக்கையில் நம் பரலோகத்தின் தேவனை வைப்போம்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் , நீதியும் , சர்வவல்லமையுள்ள தேவனே , தங்கள் மன விருப்பத்தை உம்மிடம் சொல்லாத கடினமான இருதயம் கொண்ட ஆண்களையும் மற்றும் பெண்களையும் தவிர மற்ற யாவரும் உம்முடையவர்கள். இருப்பினும், அன்பான பிதாவே , நாங்கள் எங்களுடைய இருதயத்தையும் , ஜீவனையும் , எதிர்காலத்தையும், திறமைகளையும் , சம்பத்தையும், குடும்பத்தையும் இன்னுமாய் யாவற்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறோம். எங்களிடம் உள்ள எல்லா மேன்மையான காரியங்களும், அந்தஸ்துகளும் உம்மிடமிருந்து வந்தவை, எனவே எங்கள் ஒவ்வொருவரையும் உமக்கு மகிமை கொண்டுவர எடுத்து பயன்படுத்தியருளும் . எங்கள் வாழ்க்கையை சரியான திசையில் வழி நடத்த உம்மை மாலுமியாக அழைக்கிறோம். நாங்கள் உம்மை முழு மனதுடனே நேசிக்கிறோம், இயேசுவின் நாமத்தினாலே இவை யாவற்றையும் அறிக்கையிட்டு ஜெபிக்கிறோம். ஆமென்.