இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நீதிமான்கள் தங்கள் வார்த்தைகளினால் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி நோக்கத்தை கொண்டுள்ளனர். அவை ஊக்கமளிக்கும் வார்த்தைகளாகவும், கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சாகவும், ஞானம் நிறைந்த அறிவுரைகளாகவும், ஆறுதலான வார்த்தைகளாகவும் , சத்தியத்தை போதிப்பதிலும் அல்லது தாங்கள் செய்த வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருப்பது போன்ற அநேக காரியங்களாக இருக்கலாம். இப்போது, சிலர் தங்கள் வார்த்தைகள் புத்திசாலித்தனம் என்று நினைக்கிறார்கள் , ஆனால் அவர்கள் வார்த்தைகள் இந்த வாக்குறுதியுடன் பொருந்ததாது : "நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள். " எந்த வடிவமாக இருந்தாலும், நீதிமானுடைய வார்த்தைகள் அவற்றைப் பெறுபவர்களுக்கு நிச்சயமாக ஆசீர்வாதமாகும். ஆனால், மூடர்கள் நீதிமான்களின் வார்த்தைகளுக்கு செவிக்கொடுப்பதில்லை . சத்தியம், ஞானம் மற்றும் தெய்வபக்தியை மறுத்து, முட்டாள்தனமான தங்கள் சொந்த போக்கை திட்டமிட்டு, அர்த்தமற்ற மற்றும் முட்டாள்தனமாக தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்.
என்னுடைய ஜெபம்
பிதாவாகிய தேவனே , அனைத்து சத்தியம் மற்றும் ஞானத்தின் காரணரே , என்னைச் சுற்றியுள்ள உண்மையான நீதிமான்கள் மற்றும் ஞானமுள்ளவர்களைக் கண்டறிய எனக்கு உதவியருளும் . அவர்கள் சொல்வதைக் கேட்கும் ஞானத்தை எனக்குத் தாரும் . உமது குணாதிசயத்திற்கு ஏற்றவாறு வாழ்பவர்களிடம் உமது சத்தியத்தை கேட்க நான் தாழ்மையுடன் முயல்வதால், பெருமை மற்றும் ஆணவத்தின் ஆபத்துக்களைத் தவிர்க்க எனக்கு உதவுங்கள். முட்டாள்களின் வழிகளிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள், இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.