இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமுமாய் இருக்கிறார் (வெளிப்படுத்துதல் 1:8). இந்த வார்த்தை எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது . நம் தேவன் நம்மை மற்ற தெய்வங்களுக்கு அடிமையாக விட்டுவிடுவாரோ என்று எண்ணி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவரது வார்த்தை வழக்கற்றுப் போய்விட்டதோ அல்லது காலாவதியாகிவிட்டதோ என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் நம்மைக் கைவிடுவாரோ என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவருடைய அன்பு உண்மையுள்ளது . அவர் எப்போதும் நம்முடன் இருப்பார். அவர் எப்போதும் 'இருக்கிறவராகவே இருக்கிறவர் ' (யாத்திராகமம் 3:13-14), கர்த்தரே முதலும் கடைசியுமாய் இருப்பவர் . நம்முடைய முடிவு நிரந்தரமான முடிவாக இருக்காது, ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை நித்தியக்காலமாக அவருடன் வாழும் வாழ்க்கையாக இருக்கும்.
என்னுடைய ஜெபம்
நித்திய பிதாவே , மகா பெரிய தேவனே , இரக்கமும் மற்றும் கிருபையும் நிறைந்த தேவன் நீரே , நீர் உண்மையுள்ளவராகவே இருப்பதற்காக நன்றி. நீங்கள் இஸ்ரவேலருக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருந்தீர் . ஒரு மேசியாவை அனுப்புவதற்கான உம் வாக்குறுதிகளில் நீர் உண்மையுள்ளவராகவே இருந்தீர். உமது பரிசுத்த ஆவியை கொண்டு என்னை வழிநடத்தவும், போதிக்கவும் நீர் உண்மையுள்ளவர். கர்த்தராகிய இயேசுவின் வருகையில் மெய்யாகவே உமது சமூகத்தில் என்னை அழைத்து கொண்டுவருவீர். நிலையற்ற, மாறுகின்ற மற்றும் நிச்சயமற்ற காலங்களில் எனது நிலையான கன்மலையாகவும் புகலிடமாகவும் இருப்பதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.