இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் அநேகந் தரம் உணர்ந்ததை விட அதிக வல்லமை நம்மிடம் உள்ளது. அந்த எண்ணி முடியாத வல்லமை நமக்குள் இருந்து செயல்படுகிறது (எபேசியர் 1:18-19). எவ்வாறாயினும், இந்த வல்லமையின் வாக்குறுதி, தேவனானவர் நமக்கு தினமும் கொடுக்கும் இரண்டு வாய்ப்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. 1. பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட தரிசனத்தின் அடிப்படையில் பெரிய காரியங்களைச் செய்யும்படி தேவனிடம் கேளுங்கள். 2.ஒவ்வொரு நாளும் தேவனை மாத்திரம் மகிமைப்படுத்த வேண்டுமென்றே வாழ்கையை வாழ ஒப்புக்கொடுப்போம் . எனவே, தரிசித்து செய்து தேவனை மகிமைப்படுத்தும்படி கேட்போம் . அவர் நம் வாழ்கையில் நடப்பிக்கிற எல்லா காரியங்களுக்காக அவரை துதிப்போம் . நாம் நினைக்கிறதற்கும் வேண்டிகொள்ளுகிறதற்கும் மிகவும் அதிகமாய் அவர் பெரிய காரியங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், நம்மிலும், நம் மூலமாகவும் அவர் செய்யக்கூடிய பெரிய காரியங்களை கற்பனை செய்வோம்!
என்னுடைய ஜெபம்
பரலோகத்தில் உள்ள அன்பான பிதாவே , எனது கடந்து போகும் கனவுகள், சுயநலமுள்ள ஜெபங்கள் மற்றும் குறுகிய நோக்குடைய இலக்குகள் மூலம் உம் வல்லமை மட்டுப்படுத்தியதற்காக என்னை மன்னியுங்கள். உமது சித்தத்திற்கு என் இருதயத்தை எழுப்பி, உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் உமது திட்டங்களுக்கு என் கண்களைத் திறந்த்தருளும் . இதை இயேசுவின் நாமத்தின் மூலமாய் , உம் மகிமைக்காகவும் கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.