இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்முடைய பரிசுத்தமான தேவனிடத்தில் ஆழ்ந்த மற்றும் பயபக்திக்குரிய மரியாதை இருந்தால், தேவன் விரும்புவதையே நாமும் விரும்புவோம், அவர் வெறுப்பதையே நாமும் வெறுப்போம். இருப்பினும், வேதத்தில் "வெறுப்பு" என்ற வார்த்தை மிகவும் கவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இந்த வலுவான வினைச்சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை, மேலும் இது தேவனை முதன்மையாக பயன்படுத்தும்போது, தேவனின் வெறுப்பின் பொருளைக் கவனிக்க வேண்டும். தேவன் தீமையை வெறுக்கிறார். பெருமை, அகந்தை, பொல்லாத நடத்தை மற்றும் இழிவான பேச்சு ஆகிய இவைகளை தீமை என்று தேவன் வசனத்தை கொண்டு வரையறுக்கிறார். இவை இயேசுவைப் பின்பற்றுபவர்கள் விட்டுவிலகும் காரியங்கள் மாத்திரமல்ல, அவைகளை வெறுக்கும் காரியங்களுமாம் . தேவன் தம்முடைய ஜனங்களை தாழ்மையுள்ள மக்களாக , ஒழுக்கமுள்ள நடத்தையுடயவர்களாக மற்றும் உதவிசெய்யும் நோக்கத்தை கொண்ட பேச்சு ஆகிய குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும், நீதியுமுள்ள பிதாவே , என்னுடைய பெருமையையும் சுயநலத்தையும் மன்னியுங்கள். என் அகந்தைக்கும் வஞ்சக நாவிற்கும் என்னை மன்னியுங்கள். நான் வார்த்தையிலும் செயலிலும் பரிசுத்தமாகவும், தேவையுள்ள மக்களிடம் இரக்கமுள்ளவராகவும், தீமையிலிருந்து விடுபடவும் உமது ஆவியினால் என்னை மறுவடிவமைத்தருளும் . ஆண்டவரே, என் வாழ்விலும் உமது திருச்சபையிலும் உமக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.