இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பழைய ஏற்பாடு - ஆகம புத்தகங்கள் - நியாயபிரமாணச் சட்டம் நீதியின் அடிப்படையாக இல்லாததினால் ஒரு புதிய காலத்தை எதிர்நோக்குகிறது. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் இந்தக் காலத்திற்குச் சாட்சியமளிக்கின்றன. இந்த நீதி தேவனிடமிருந்து வருகிறது, இது இயேசுவின் தியாகப் பலியின் அடிப்படையில் தேவனானவர் நமக்குக் கொடுத்தார், அவர் நியாயப்பிரமாண சட்டத்திலிருந்து நம்மை விடுவித்து, தேவனின் கிருபையைக் நமக்கு கொண்டு வந்தார். நமக்கு தேவையான விஷயம் என்னவென்றால் மெய்யான விசுவாசம் - இன்று பலர் நம் அறிவினால் எதையாவது நினைத்துக்கொண்டு விசுவாசிப்பதை குழப்புகிறார்கள். எவ்வாறாயினும்,பைபிள்(பரிசுத்த வேதாகமம்) விசுவாசம் இயேசுவின் மீதுள்ள நம் இருதயத்தினால் உள்ளடக்கிய ஒன்று என்று குறிப்பிடுகிறது , இது கர்த்தராகிய இயேசுவின் மாதிரியின் மூலமாயும், அவருடைய போதனைகளுக்கு நாம் முற்றிலுமாய் கீழ்ப்படிந்து நடப்பதின் மூலமாயும் நிரூபிக்கப்பட்டுள்ளது (மத்தேயு 7:13-27). அப்படியென்றால், இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையை எதின் அடிப்படையில் உருவாக்குகிறீர்கள்? உங்கள் நீதியின் அளவு என்ன? உங்களின் பாதுகாப்பு எதின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது? தேவனுக்கு நன்றி, நம்முடைய வாழ்க்கை, எதிர்காலம் மற்றும் இரட்சிப்பு ஆகியவற்றை இயேசு கிறிஸ்துவிடம் நம்பலாம், இனி ஒருபோதும் நியாயபிரமாண சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு கூறியது போல்: நாம் அவருக்குள்( இயேசு கிறிஸ்து )தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் - 5 :21)

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற பிதாவே , உம் குமாரனாகிய இயேசுவையே எனக்கு ஒரு இரட்சகராக வழங்கியதற்காக உமக்கு மிக்க நன்றி. அவருடைய சிலுவை மரணத்தினாலும், அவர்மீது அடியேன் வைத்த விசுவாசத்தின் மூலமாயும் என்னை நீதிமான் என்று அறிவித்ததற்காக நன்றி. என் வாழ்க்கையையும் இரட்சிப்பையும் இயேசுவிடம் ஒப்புவித்து வாழும்போது தயவுக்கூர்ந்து எனக்கு உதவியருளும் , அப்பொழுது நான் எப்படி என் வாழ்க்கையை வாழ்கிறேன் என்பதன் மூலமாய் அவருடைய வாழ்க்கையையும் குணாதிசயத்தையும் நான் மற்றவர்களுக்கு எடுத்துக்காண்பிக்க முடியும். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து