இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த எளிய வார்த்தைகள், "அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற வார்த்தை " என்பது புரட்சிகரமானது! இயேசு தேவனிடம் "அப்பா பிதாவே "* என்று ஜெபித்தது போல, நாமும் தேவனிடம் வெளிப்படையாகவும் மனம்விட்டு பேசலாம். "அப் அப் பா " என்ற எளிய எழுத்துக்கள் ஆரம்பகால குழந்தைகளின் மழலை மொழிகளில் சில. அவர்கள் "அப்பா" என்ற வார்த்தையை உருவாக்குகிறார்கள், இது மிகவும் இளம் குழந்தைகளால் தங்கள் பூமிக்குரிய தந்தைகளுடன் நெருக்கமாகவும், மரியாதையாகவும், சார்ந்து மற்றும் வெளிப்படையாகவும் பேச பயன்படுத்தப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் தேவனின் அன்பான பிள்ளைகள் போன்ற அதே பாக்கியத்தை நமக்குத் தருகிறார். பிரபஞ்சத்தை உருவாக்கியவர், இஸ்ரவேலின் மகா பெரிய தேவன் , எல்லா மக்களுக்கும் பிதாவானவர் , நித்தியத்தின் சர்வவல்லமையுள்ளவர், நாம் ஜெபிக்கும்போது "அப்பா" என்று அழைக்கலாம் - நம்முடைய இரட்சகராகிய இயேசுவைப் போலவே அழைக்கலாம் . ஆச்சரியமான வாய்ப்பு !
என்னுடைய ஜெபம்
அப்பா பிதாவே , உமது பரிசுத்த ஆவியின் மூலம் என்னுள் நீர் வாசம் செய்வதற்காக நன்றி. இவ்வளவு பரிச்சயத்துடனும், தைரியத்துடனும், மரியாதையுடனும் சார்புடனும் உம்முடன் உரையாட அனுமதித்ததற்காக நன்றி. நித்தியமாக என் பரலோகத் தந்தையாக இருப்பதற்காகவும் , உம்மை "அப்பா" என்று அன்புடன் அழைக்க என்னை தகுதிப்படுத்தினதற்காக நன்றி! இயேசுவின் நாமத்தினாலே , நான் பணிவுடன் நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.