இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வார்த்தைகளை நீங்கள் கவனமாகக் கேட்டால், பரலோகம் இப்படியாக கூறுகிறது, "ஒரு பரிசுத்தமான குளிர்ச்சியான தருணத்தைப் பெறுங்கள்." இந்த அழைப்பை நான் அலட்சியப்படுத்தவில்லை. பரலோகம் இப்படியாக கூறுகிறது, " அவரை சார்ந்து மற்றும் நம்பிக்கையுடன் கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திருத்து அவர் பிரசன்னத்திற்கு வாருங்கள்." ஆனால் நம் உலகம் வெறித்தனமாக இருக்கும்போது, ​​எல்லா இடங்களிலும் சத்தம் இருக்கும்போது, ​​​​தீமை நிறைந்ததாகத் தோன்றும்போது நாம் எப்படி இவற்றை செய்ய முடியும்? காலம் கடந்தும் மற்றும் நித்திய காலத்தின் வேலையில் தேவன் நமக்குச் சரியானதைச் செய்வார் என்பதை நாம் அறிவோம். பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய வரலாற்று சம்பவங்கள் நிறைந்த கதை . வரலாற்றை விட, இது அவரையும் அவரை குறித்து படிக்கிறதான கதை. தேவன் எப்பொழுதும் தம் வாக்குத்தத்தங்களுக்கு உண்மையுள்ளவராகவும், மீட்பதில் கிருபையுள்ளவராகவும், தம்முடைய பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளும் அன்பில் தாராளமாகவும் இருக்கிறார் என்பது நமது சிறந்த நினைவூட்டலாகும். எனவே தேவனின் பிரசன்னத்திற்கு வந்து அமைதியாகவும், பொறுமையாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்க எப்பொழுதும் தயாராக இருங்கள்! தேவன் அவருடைய பரலோகத்தின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் . அவருடைய உண்மை தன்மையில் நம் நம்பிக்கை வைப்பதால், அவருடைய கிருபையில் நாம் பரிசுத்தமான குளிர்ச்சியைப் பெறலாம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , இந்த அமைதியான தருணத்தின், என் இருதயத்தில் உள்ள கவலைகளையும் வியாக்குலங்களையும் உம்மண்டையில் வைக்கும்போது நான் உணர்வுபூர்வமாக இளைப்பாருதலை உம் சமூகத்தில் பெற்றுக்கொள்ளுகிறேன் . அன்புள்ள பிதாவே , நீர் என் வாழ்வில் மீட்புடன் செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நீர் எனக்கு அமைதியைத் தருவீர்கள், என் ஆத்துமாவையும் எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உம் கரங்ககளில் தைரியத்துடன் வைக்க முடியும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து