இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நாம் எவ்வளவு நல்லவர்களாய் இருந்தாலும் , அல்லது எவ்வளவு கிரியை நடப்பித்தாலும் , சர்வவல்லமையுள்ள தேவனின் மகிமையான பரிபூரணத்தை - அந்த மேன்மையான ஒரே தரத்திற்கு நாம் ஒருபோதும் அளவிட முடியாது. அதிர்ஷ்டவசமாக, நாம் அந்த அளவிற்கு பூரணராக , கறையற்றவர்களாக மற்றும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைப் போல பாசாங்கு செய்ய தேவன் நம்மை ஒருபோதும் கேட்கவில்லை. மாறாக, தேவன் கிருபையினால் நம்மை அவைகளிலே அப்படி ஆக்குகிறார் (கொலோசெயர் 1:21-23) அவருடைய குமாரனுடைய ஈவின் மூலமாய் , அவர் நமக்கான மன்னிப்பை அவருடைய ஜீவனை பலியாக கொடுத்து வாங்கி, அவருடைய நீதியை நமக்கு அளித்தார் (2 கொரிந்தியர் 5:21). தேவனை ஸ்தோத்திரியுங்கள். எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் போற்றுங்கள். இப்போது நம் இரட்சிப்பைச் சம்பாதிப்பதற்கோ அல்லது பாதுகாப்பதற்கோ அல்ல, இயேசுவை ஆண்டவராகக் ஏற்றுக்கொண்டு வாழ்வோம், ஆனால் இயேசுவை கிருபையாக அவர் நமக்கு இலவசமாக வழங்கியதற்காக தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துவோம்!

என்னுடைய ஜெபம்

மிகவும் விலையேறப்பெற்ற மற்றும் பரிசுத்தமுள்ள பிதாவே , உமது அற்புதமான கிருபைக்காக அடியேன் சொல்லக்கூடியது நன்றி மாத்திரமே ! இந்த நன்றியுள்ள வார்த்தைகள் போதுமானதாக இல்லை என்றாலும், அவை உண்மையானவை என்பதை அறிந்துக்கொள்ளும் . அன்புள்ள பிதாவே , நீர் எனக்காகச் செய்த எல்லாவற்றிற்காகவும் நான் எவ்வளவு அதிகமாய் உமக்கு துதிகளை செலுத்துகிறேன் என்பதை என் வாழ்நாள் முழுவதும் உமக்கு காண்பிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இயேசுவின் மகிமையான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து