இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ரோமர்களுக்கு எழுதிய நிரூபத்தில் காணப்படும் இந்த வசனம் , விசுவாசத்தை கொண்டு கிருபையினால் இரட்சிப்பு உண்டாயிற்று மற்றும் எல்லா மக்களுக்கும் தேவனின் மீட்பின் திட்டம் பற்றிய விளக்கத்தை சொல்லி முடித்த பிறகு, அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வார்த்தைகளை எழுதினார். இந்த வார்த்தைகளை நான் படிக்கும் ஒவ்வொரு முறையும் என்னை நெகிழ வைக்கிறது. வேதாகமத்தில் உள்ள சில விஷயங்களுக்கு விளக்கம் அல்லது விரிவாக்கம் தேவையில்லை; அவை பேசப்பட்ட வார்த்தை அப்படியே நம்பப்பட வேண்டும் என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றது . ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!..... சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது, அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். இந்த சிறிய துதிப் பகுதியை மனப்பாடம் செய்து, அதை உங்கள் இருதயத்திற்கு அருகில் வைத்திருக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன், மேலும் உங்கள் எல்லா கஷ்ட காலங்களிலும், காணிக்கை , ஆசீர்வாதம் மற்றும் தொழுகை காலங்களிலும் அது உங்கள் உதடுகளிலிருந்து வரும் ஜெபமாக இருக்கட்டும் .

என்னுடைய ஜெபம்

ஆ , உம்முடைய ஞானம் மற்றும் அறிவின் ஐசுவரியத்தின் ஆழம் எவ்வளவு ஆழமானது, எங்கள் தேவனே ! எல்லாம் உம்மிடமிருந்தும் உமது கிருபையினாலும் வந்தன. எங்கள் தேவனே , உம்முடைய மகிமைக்காக, எல்லாம் உமது படைப்பின் ஞானியை பறைசாற்றி, அவைகள் உம் மகத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. உமக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து