இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சில வேளைகளில் , அவருடைய சித்தத்தைச் செய்ய முற்படுபவர்களுக்கு தேவனின் ஞானம் எளிமையாகவும் , சுருக்கமாகவும் மற்றும் இனிமையாகவும் இருக்கும். என் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்கள் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா நீதிமான்களாக இருந்தார்கள் , முழு மனதுடன் கர்த்தரை நேசிக்கவும் முயன்றதால், அவர்கள் என்னை இனிமையான எண்ணங்களுடன் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் தொடுபவர்களின் வாழ்க்கையை விஷமாக்கி, என் சந்ததியினரின் பாரம்பரியத்தில் ஒரு பொல்லாத அடிச்சுவடை விட்டுச்செல்லும் வாழ்க்கையை வாழ நான் மறுக்கிறேன். நமக்குப் பின் வருபவர்களுக்கு பல ஆசீர்வாதங்களைத் தரும் விசுவாசத்தின் மரபை ஆசீர்வதிக்க ஒருவருக்கொருவர் ஊக்குவிப்போம்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, என்னுடைய குணமும் இரக்கமும் என்னுடைய பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளின் பிள்ளைகளையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய எல்லா செயல்களிலும், வார்த்தைகளிலும், நடத்தையிலும், செல்வாக்கிலும் எனக்கு ஞானம், பகுத்தறிவு, சாதுர்யம், மரியாதை, நேர்மை, அன்பு மற்றும் பரிசுத்த மனதுருக்கத்தை தாரும். என்னுடைய சரீர மற்றும் ஆவிக்குரிய குடும்பங்களில் உள்ளவர்களுக்கு ஒரு தெய்வீக செல்வாக்கையும் நீதியான நினைவையும் நான் வழங்குவேனாக. இயேசுவின் நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.