இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எந்த ஒரு சட்டமும் நம்மை நீதிமான்களாக்கவோ அல்லது இரட்சிக்கவோ முடியாது, பழைய ஏற்பாட்டு நியாயப் பிரமாண சட்டத்தால் கூட முடியாது என்பதை கலாத்தியர் மீண்டும் மீண்டும் நமக்கு நினைப்பூட்டுகிறார். இருப்பினும், நியாய பிரமாண சட்டம் (தோரா) பல அத்தியாவசிய விஷயங்களைச் செய்கிறது. * தம்முடைய மக்கள் செய்யவேண்டும் என்று நினைத்து தேவன் கொடுத்த சட்டத்தை இயேசுவானவர் நிறைவேற்றினார் , இந்த சட்டம் கிறிஸ்துவிடம் நம்மை வழி நடந்துகிற ஒரு உபாத்தியாய் இருக்கிறது (மத்தேயு 5:17-20). தேவன் அருளின சட்டத்தை நாம் கடைப்பிடிக்கும்போது எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை இயேசு நமக்குக் காண்பிக்கிறார். * எது சரி அல்லது தவறு, ஒரு மனிதனின் மதிப்பு, மற்றும் தேவன் ஒரு மனுசன் , திருமணம் , நீதியுள்ள வாழ்க்கை மற்றும் அநீதியான நடத்தைகளை எவ்வாறு வரையறுக்கிறார் என்பதை அறிய இந்த சட்டம் நமக்கு உதவுகிறது. சட்டத்தின் மூலமாக நம்முடைய தோல்விகள், குறைபாடுகள், பாவங்கள், மீறல்கள் மற்றும் பெலவீனங்களை நாம் அறிகிறோம், மேலும் நியாயப்பிரமாணத்தின் மூலம் ஒரு இரட்சகருக்கான நமது தேவையை நாம் அறிந்துக்கொள்ளுகிறோம் . தோராவுக்காக ( நியாயப் பிரமாண சட்டத்துக்காக ) நாம் தேவனை போற்றுவோம் , தேவனின் சட்டம் நமக்கு நீதியான குணத்தையும், கிருபை நிறைந்த இரக்கத்தையும், விசுவாசமுள்ள நீதியையும் அவர் விளங்கப் பண்ணவும் அதின்படி நாம் வாழவும் விரும்புகிறார். நியாயப்பிரமாணத்தின் நீதியுள்ள எல்லா காரியங்களையும் நிறைவேற்றி, நம்முடைய பாவங்களுக்கு பரிபூரண பலியாகத் தம்மையே ஒப்புக்கொடுத்த இயேசுவுக்காக தேவனுக்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் செலுத்துவோம் !
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பரலோகத்தின் பிதாவே , உம்முடைய நியாயப்பிரமாண சட்டத்தின் குறிக்கோள் எங்களை இயேசுவிடம் கொண்டு வருவதே என்பதற்காக உமக்கு நன்றி. நியாயப்பிரமாணம், தோரா(ஆகாமங்கள்) , ஆகிய சட்டங்கள் இயேசுவின் பரிபூரணத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவுகிறது. இது என் பாவத்தை அறிய உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் தியாகம், நியாயப்பிரமாண சட்டத்தால் செய்ய முடியாததை செய்தது - உம்முடைய நீதியை எனக்கு அளிக்கிறது என்பதை உணர இது எனக்கு உதவுகிறது. பிதாவே , இயேசுவானவர் எனக்காக மரித்து, உம்முடன் எனக்கு ஒரு நித்திய வாழ்க்கையை அளிக்க வந்தார் என்பதை நான் முழு மனதுடன் நம்புகிறேன். இயேசுவின் நாமத்திலும், இயேசுவின் நீதியின் நிமித்தமும் நான் உமக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் ! ஆமென்.