இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நமது பாதுகாப்பின் அடிப்படையாக நாம் எவைகளை கருத விரும்புகிறோம்? அது நம்மால் செய்யக்கூடியவையா , சாதிக்க முடிந்ததா, சம்பாதிப்பதா , பாதுகாக்க கூடியதா மற்றும் சேமித்து வைப்பதா? அல்லது தலைமுறை தலைமுறையாகத் தம்மை உண்மையுள்ளவராகக் விளங்கச் செய்த நம் தேவனா ? நாம்தான் தேர்வு செய்ய வேண்டும்! நம் தேர்வுகள் மூலம் நாம் ஒவ்வொரு நாளும் அதைச் செய்கிறோம் - நமது நேரம், பணம் மற்றும் ஆளுமை தன்மை ஆகியவற்றை கொண்டு நாம் என்ன செய்கிறோம். எனவே, உங்கள் பாதுகாப்பை எதில் காண்பீர்கள்? உங்கள் வாழ்க்கையை எதில் முதலீடு செய்வீர்கள்? நான் அதை கர்த்தரில் முதலீடு செய்யத் தேர்வு செய்கிறேன்! உங்களை குறித்து உங்களுடைய பதில் என்ன?
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே, நீர் இஸ்ரவேலின் பிதா, தேசங்களின் தேவன், என் அப்பா பிதா. நான் என் நம்பிக்கையையும், என் எதிர்காலத்தையும், என் விசுவாசத்தையும் உம்மில் வைக்கிறேன். என் பணம், உடைமைகள், சாதனைகள் மற்றும் திறமைகள் என்னுடையவை அல்ல என்பதை நான் அறிவேன். உம்மை மகிமைப்படுத்தவும், உம் கிருபையை மற்றவர்களுக்குக் வழங்கும்படி நீர் இவற்றை எனக்கு கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறீர். தயவுசெய்து என் இருதயத்தைத் பரிசுத்தமாகவும் , உமது மீது கவனம் செலுத்த எனக்கு உதவியருளும் . என் இருதயத்திலிருந்து பெருமையையும் சுயநலத்தையும் மெதுவாக எடுத்துப்போட்டு பரிசுத்தம் பண்ணும் . தயவுசெய்து உமது ஆசீர்வாதத்தை என் மீது பொழிந்தருளும் - நான் அவற்றைப் பெறுவதற்காக அல்ல, ஆனால் நான் உமக்கு அதிக மகிமையைக் கொண்டு வந்து, உமது கிருபையான ஆசீர்வாதங்களைத் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி. என்னை எடுத்து பயன்படுத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.