இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் மூத்த சகோதரர் இயேசு மரித்து , அவருடைய குடும்பப் சுதந்திரத்தை உங்களுக்கு விட்டுச் சென்றார்! நம்புவது கடினம் என்பது எனக்குத் தெரியும், ஆனால் இயேசுவானவர் நம்முடைய சகோதரர் என்று பரிசுத்த வேதாகமம் கற்பிக்கிறது, மேலும் நாம் கிறிஸ்துவுடன் உடன்-சுதந்திரர்கள் என்று பவுல் நமக்கு வலியுறுத்துகிறார் (எபிரெயர் 2:11-12). அதுதான் இங்கே சொல்லப்பட்ட செய்தியாகும் . நமக்குள் தேவனின் ஆவி இருப்பதால், நாம் தேவனின் புத்திரர்கள் . நாம் கடவுளின் புத்திரர் என்பதால், பரலோகத்தின் தேவன் நமக்கு வழங்கும் அனைத்திற்கும் நாம் சுதந்திரர்கள் . நாம் கிறிஸ்துவுடன் உடன்-சுதந்திரர்கள், அவருடைய மரணம் தேவனின் குடும்பத்தில் நம்மைத் புத்திர சுவிகாரராய் இருப்பதற்கு வழிவகுத்தது . எனவே, நாம் சில கடினமான நேரங்களையோ அல்லது வேதனையான சிரமங்களையோ எதிர்கொள்ள வேண்டியிருந்தால், நாம் விரக்தியடைய மாட்டோம். பரலோகத்தின் அனைத்து ஆசீர்வாதங்களையும் நாம் சுதந்தரித்துக்கொள்ளும் நேரம் வருவதை நாம் அறிவோம், மேலும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் குமாரனாகிய இயேசுவின் காரணமாக பரலோகத்தில் நம் பிதாவுடன் நித்திய காலமாக வாழ்வோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, உமது மிகுந்த கிருபைக்காக நன்றி. அந்த கிருபையை மென்மேலும் என்மீது பொழிந்தருளும் . தயவுசெய்து என் சோதனையின் பாரத்தையும் மற்றும் சிரமங்களையும் தைரியத்துடனும், உண்மையுடனும் எதிர்க்கொள்ள எனக்கு உதவியருளும் . கடினமான காலங்களில் நான் தொடர்ந்து நிலைத்திருக்க எனக்கு பெலன் தாரும் , ஏனென்றால் நான் இறுதியில் உம்முடன் பரலோகத்தை பகிர்ந்து கொள்வேன் என்று எனக்குத் தெரியும். நான் உமது பிள்ளை என்றும், உமது எல்லா ஆசீர்வாதங்களிலும் என்றென்றும் பங்கு பெறுவேன் என்றும் எனக்கு உறுதியளிக்கும் உம் வல்ல ஆவிக்காக நன்றி. இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கும்போது "அல்லேலூயா!" என்று சத்தமிட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து