இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீ இன்று எதை தரித்துக்கொண்டிருக்கிறாய் ? நீங்கள் கிறிஸ்துவை தரித்துக்கொண்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் யார் வடிவமைத்ததை தரித்திருந்தாலும் சரி, அவை பரலோகத்தின் தரத்திற்கு ஒப்பிடும் போது நீங்கள் தரித்து கொண்டிருப்பது ஒன்றுமில்லை . விசுவாசத்தின் மூலம் (ரோமர் 13:14), அவர் உங்களுக்காக மரித்த தேவனுடைய குமாரன் என்று நம்புவதன் மூலமும், மரணத்திலிருந்து அவரை எழுப்பிய தேவனின் வல்லமையை விசுவாசிப்பதின் மூலமும் (ரோமர் 13:14) உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைப்பதன் மூலம் நீங்கள் கிறிஸ்துவை தரித்துக்கொள்ளலாம் ( 1 கொரிந்தியர் 15:1-7; கொலோசெயர் 2:12; 3:1-4). கிறிஸ்துவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு , உங்கள் இரட்சிப்பு நிறைவேற நம்புங்கள் (ரோமர் 10:9-13) ஞானஸ்நானம் மூலம் அவருடைய மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் நீங்கள் அவருடன் பங்குகொள்ளும்போது இரட்சிகப்படுவீர்கள் (ரோமர் 6:3-14; அப்போஸ்தலர் 22:16). ஞானஸ்நானம் பெற்றபின் உங்களுக்குள் வாழ அவருடைய ஆவியை அனுப்புவதாகவும், அவருடைய குடும்பத்தில் உங்களுக்குப் புதிய ஜீவனைக் கொடுக்கும்போது உங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பதாகவும் அவர் உறுதியளிக்கிறார் (தீத்து 3:3-7). நீங்கள் தேவனின் புத்திராய் இருப்பீர்கள், பரலோகத்தில் உங்களுக்காக ஒரு வீடு காத்திருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நமக்கு, இந்த எண்ணங்கள் தேவன் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை நினைப்பூட்டுகிறது. நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இல்லாவிட்டால், உலகம் குளிர்ச்சியான மற்றும் தனிமையான இடமாக இருக்க வேண்டியதில்லை; கர்த்தராகிய இயேசுவுக்கு நீங்கள் விசுவாசத்துடன் பதிலளித்தால், நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் உங்களோடு அவரால் மாத்திரமே இருக்க முடியும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் உம் பிள்ளையாக மாறுவதற்கு ஒரு வழியை கொடுத்ததற்காக நன்றி. இயேசுவின் நீதியை எனக்கு தரித்ததற்காக நன்றி. நாங்கள் உம்மை அப்பா பிதாவே என்று அழைப்பதற்கும், இயேசுவானவரை என் மூத்த சகோதரனாகக் கொண்டிருப்பதற்காகவும் உமக்கு நன்றி. அன்புள்ள பிதாவே, இயேசுவுக்காக நன்றி செலுத்தி அவர் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து