இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சாத்தானின் பிடியின் கீழ் இருக்கும் நமது விழுந்துபோன உலகில் வாழ்க்கை மிகவும் கடினமானது, அநேக வேளைகளில் துன்பங்களும் நிந்தைகளும் நிறைந்தது. கொடுமை நிறைந்த உலகில் இயேசுவுக்காக வாழ முயற்சிப்பது மேன்மையானதா? ஆமாம்! அது மேன்மையானது . பரலோகத்தில் அவருடனே கூட வாழ நமக்காக வைத்திருக்கிற தேவனின் மகிமையை நாம் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. இந்த உலகத்திலே நம்முடைய வாழ்க்கை பயணம் எவ்வளவு கடினமாகவும், வேதனையாகவும், துன்பங்கள் நிறைந்ததாக இருந்தாலும், தேவனுடனான நம் எதிர்காலத்தை ஒப்பிடமுடியாத அளவிற்கு அவை மிகச்சிறந்த ஒன்றைக் கொண்டுள்ளது. அதாவது எனது சிரமங்கள், பாடுகள் அர்த்தமற்றவை அல்லது முக்கியமற்றவை என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை! தேவனுடனான நமது எதிர்கால மகிமை, அவரை பற்றிக்கொள்ளவும் , உண்மையாக இருக்கவும், அவரை கனம் பண்ண நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளுக்கு மேன்மையானது என்பதைக் குறிக்கிறது, ஏனென்றால் நாம் அவருடைய மகிமையான ஜீவ கிரீடத்தை பெறுவோம்!
என்னுடைய ஜெபம்
பிதாவே, துன்பம், வலி, ஏமாற்றம், பாடுகள் , ஏளனம் அல்லது துக்கம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும், உம் வாக்குத்தத்தங்கள் உண்மை என்று நான் நம்புகிறேன். நீர் எனக்காக உன்னதத்தில் வைத்திருக்கும் மகிமை இப்போது நான் எதிர்கொள்ளும் சிரமங்களை விட மிகப் பெரியது என்ற வாக்குறுதியை நான் உறுதியாகப் பிடித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் நாட்களில் என்னைப் பெலப்படுத்தி , என் தற்போதைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் உமக்கு மகிமையைக் கொண்டுவர என்னை எடுத்துப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே , நான் சகித்து, விடாமுயற்சியுடன், நம்பிக்கையுடன் இருந்து, ஜெபிக்கிறேன் . ஆமென்.