இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுக்கு முன்பாக நமக்காகப் பரிந்து பேசுவதற்கு, எவ்வளவு வல்லமை படைத்தவராகவோ, பக்திமிக்கவராகவோ அல்லது சிறப்பு வாய்ந்தவராகவோ இருக்கும் , இன்னொரு மனுஷனை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தேவனே தனக்கும் நமக்கும் இடையே சரியான மத்தியஸ்தரை வழங்கியுள்ளார் என்பதை அறிந்து, அவருடைய பிள்ளைகளாகிய நாம் சுதந்திரமாக செல்லலாம். அந்த மத்தியஸ்தர் மட்டுமே, சபையின் தலையாகவும் , நம் சார்பாக தேவனுக்கு முன்பாக பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார். அவருடைய நாமம் கிறிஸ்து இயேசு, அவர் நம்முடைய கர்த்தரும், இரட்சகரும், சகோதரருமாவார்.
என்னுடைய ஜெபம்
தேவனே , நீரே என் தேவன் , உம்மை எளிதாக கிட்டி சேருவதற்கு என்னை அனுமதித்ததற்காக நான் துதிக்கிறேன் . என் சொந்த பெலத்தினால் காரியங்களை நடப்பிக்க விட்டுவிடாமல் , உம்மை கிட்டி சேர பெலனோ, நீதியோ என்னிடம் இல்லை என்பதை நான் அறிவேன். ஆயினும், உமது கிருபையால், என் பாவத்திற்கு மீட்பை வழங்கியது மட்டுமன்றி, நான் உம்மை கிட்டி சேருவதற்கு ஒரு மத்தியஸ்தரையும் உண்டு பண்ணினீர்கள் . இயேசுவே, என் பாவத்திற்கான விலையை கொடுத்து , இன்றளவும் எனக்காகப் பரிந்து பேசுவதற்காக , பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தமைக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன்! இயேசுவே, உமது நாமத்தினால் நான் ஜெபிக்கும்போது இந்த விண்ணப்பத்தை பிதாவுக்குத் தெரியப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. ஆமென்.