இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் நேசிக்கிறவர்களை ஆசீர்வதிக்க நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய காரியம் என்ன? கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரன் அல்லது சகோதரி, அல்லது தேவனுடைய மக்களாகிய முழு சபையும், சாத்தானிடமிருந்து பெரும் சவால்களை எதிர்கொள்ளும்போது நாம் செய்யக்கூடிய மிகவும் உதவிகரமான காரியம் என்ன? இன்று நம் பிள்ளைகள் , பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இயேசுவுக்காக வாழ முற்படும்போது நாம் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று என்ன? இந்த வசனங்களில், அப்போஸ்தலனாகிய பவுலானவர் , தேவனிடம் தம் மக்களை அவர்களின் உள்ளான மனுஷனில் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தினாலும் மற்றும் வல்லமையால் பலப்படுத்தும்படி எப்படிக் கேட்பது என்பதைக் விளக்கி காண்பித்திருக்கிறார் . பின்னர், அவர் என்ன ஜெபித்தார் என்று அவர்களிடம் கூறினார். நாம் நேசிக்கிறவர்களுக்காகவும் இந்த ஜெபத்தை ஜெபிக்கலாம். பின்னர், நாம் அவர்களுக்காக இந்த ஜெபத்தை ஜெபித்தோம் என்றும் , அவர்களின் வாழ்க்கையின் சவால்கள் கடந்து செல்லும் வரை தொடர்ந்து ஜெபிப்போம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.
என்னுடைய ஜெபம்
கிருபையுள்ள தேவனே, சர்வவல்லமையுள்ள பிதாவே, தயவுக்கூர்ந்து பரிசுத்த ஆவியின் மூலம் உம்முடைய வல்லமையினாலும் பிரசன்னத்தினாலும்... (நீங்கள் ஜெபிக்கும்போது குறிப்பாகப் அந்த நபரின் பெயர் சொல்லி குறிப்பிப்பிட்டு ஜெபியுங்கள் ) ஆசீர்வதியும். அவர்களை ஊக்குவிக்கவும் பலப்படுத்தவும் நான் தொடர்ந்து என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், ஆனால் நான் அவர்களுக்காகச் செய்யக்கூடிய எதையும் விட உமது ஆவியின் வல்லமை அவர்களுக்கு மிக அதிகமாகத் தேவை என்று நான் நம்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே அடியேன் செய்த ஜெபத்தைக் நீர் கேட்டதற்காக நன்றி. ஆமென்.