இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீதிமான்! அது தான் நாமாய் இருக்கிறோம். ஆனால் நாம் நீதிமான்கள் அல்ல. அப்படியல்ல நாம் அவர்களை விட மேலானவர்கள். நாம் அனைவரும் தேவநீதியாய் இருக்கிறோம். அவர் மெய்யாகவே எவ்வளவு பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், கிருபையுள்ளவர் என்பதற்கு நாம் சாட்சிகளாய் இருக்கிறோம், ஏனென்றால் இயேசுவில் நாம் அவருடைய நீதிமான்களாய் இருக்கிறோம் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய குமாரனின் மரணத்தில் உண்டான இரத்தத்தின் மூலமாய் என்னை நீதிமானாய் ஆக்கியதற்காக உமக்கு நன்றி. உமது கிருபையை ஜனங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் முயற்சிக்கும்போது, ​​உம் பரிசுத்தம் , நீதி, இரக்கம் , ஆகியவற்றின் பிரதிபலிப்பை அவர்கள் என்னில் காணட்டும். என்னுடைய பாவத்திற்கான கிருபாதார பலியாகிய இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து