இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"இயேசுவின் சிலுவையின் நிழலில் " என்ற வல்லமை வாய்ந்த பழைய பாடலில், "என் சிலுவையே எனக்கு மகிமை " என்று பாடுகிறோம். இயேசுவைப் பொறுத்தவரை அந்த வரிகள் மெய்யாகவே இருந்தது. மற்ற மனித தலைவர்கள் எல்லாவிதமான வழிகளிலும் மகிமையைக் காண முயலும்போது, இயேசுவின் மகிமைக்கான பாதை சிலுவையாக இருந்தது. அவர் பாராட்டையோ, புகழையோ தேடிச் செல்லவில்லை; அவர் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து தேவனை மகிமைப்படுத்த விரும்பினார்! எனவே யூதாஸ் கடைசி இரவு போஜனத்தை விட்டு வெளியேறியபோது, அவர் இறுதியாக அடையப்போகிற சிலுவை மரணத்தின் துவக்கமாய் அது அமைந்தது . இந்த காரியங்கள் இயேசுவை கல்வாரியின் கொடுமையண்டையிலும் , சிலுவையண்டையிலும், சிலுவையிலே படும் பாடுகளண்டையிலும் கொண்டு வரும். ஆனால், சிலுவையின் பாடுகளை,அவர் மங்கிப்போகச் செய்யும் செயலாக பார்க்காமல், தேவனை மகிமைப்படுத்துவதற்கும், தேவனுக்கு கனத்தை சேர்ப்பதற்கும், நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்குமான செயலாக இயேசுவானவர் பார்த்தார் .
Thoughts on Today's Verse...
In the powerful old hymn "Beneath the Cross of Jesus," we sing "my glory all the cross." That was genuinely true of Jesus. While other human leaders try to find glory in all sorts of ways, Jesus' path to glory was the cross. He wasn't after acclaim; he wanted to obey and glorify the Father! So when Judas left the Last Supper, the final stages of the process were set in motion. These processes would bring Jesus to the horrors of Calvary, the cross, and crucifixion. But rather than seeing the cross as his degradation, Jesus saw it as his way of glorifying God, bringing honor to God, and bringing us salvation.
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே , மற்றவர்களுடைய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தேடுவதற்காக என்னை மன்னியுங்கள். இவ்வளவு சுயநலம் கொண்டவனாக இருப்பதற்காக தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். உம்முடைய மகிமையை தேடாமல் , என் மகிமையை குறித்தே நினைத்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆம், நான் மற்றவர்களின் இருதயங்களை உடைத்த நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள், ஏனென்றால் நான் என்னை குறித்தே ஓய்வில்லாமல் அதிகமாக நினைத்து செயல் பட்டேன் மற்றும் என்னைச் சுற்றியுள்ளவர்களை புறக்கணித்தேன். இயேசுவானவர் ஜீவனோடிருந்த கடைசி வாரத்தின் வாழ்க்கை மாதிரியை நினைப்பது, என்னை மாயையை விட்டு திரும்பி நிஜத்திற்கு கொண்டுவருகிறது .மேலும் பிதாவே , இயேசுவைப் போலவே, நானும் எந்த விலையாக இருந்தாலும் அதைக் கொடுத்து உமக்கு ஊழியஞ் செய்வதில் மெய்யான மகத்துவம் காணப்படுகிறது என்பதை உணர்ந்துக் கொள்ள உதவும் . இயேசுவின் நாமத்தினாலே , நான் ஜெபித்து, உமக்கு மகிமையைக் கொண்டுவர விரும்புகிறேன். ஆமென்.
My Prayer...
O, dear Father, please forgive me for seeking the approval and recognition of others. Please forgive me for being so self-centered. Please forgive me for thinking of my glory and not yours. And yes, please forgive me when I have trampled on the hearts of others because I was so busy gaining attention for myself and neglected those around me. Jesus' example in the last week of his life shocks me back to reality, Father, and helps me realize that true greatness is found in serving you, completely, no matter the cost, like Jesus. In Jesus' name, I pray and long to bring you glory. Amen.