இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
உங்களுடைய மிகப்பெரிய தரிசனம் என்ன? தேவன் உங்கள் மூலம் அதை விட அதிகமாகச் செய்ய விரும்புகிறார்! உண்மையான கேள்வி என்னவென்றால், நீங்கள் அதை நம்புவீர்களா, அதைப் பெறுவீர்களா, பகிர்ந்து கொள்வீர்களா, பின்னர் அதற்கான மகிமையை அவருக்குக் கொடுப்பீர்களா என்பதுதான்? இந்தப் புகழ்ச்சிப் பகுதியைப் போலவே உங்கள் வாழ்க்கையும் ஒரு அல்லேலூயாவாக (தேவனுக்கு மகிமையாக) இருக்க வேண்டும் என்பதே!
என்னுடைய ஜெபம்
தேவனே , நீர் மகிமையுள்ளவர், உதாரத்துவமுள்ளவர் , கிருபையுள்ளவர். உமது கிருபையின் அற்புதமான தொடுதல்களால் என்னை சரீர பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் ஆசீர்வதித்திருக்கிறீர். உமது உண்மைத்தன்மைக்காக நான் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் . உமது மிகுந்த கிருபைக்காக நன்றி. உமது நாமத்தை மற்ற எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தி, அதை ஒரு தனிப்பட்ட பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். தயவுசெய்து என்னில் மகிமைப்படுங்கள் - என் பேச்சு, செயல்கள், செல்வாக்கு மற்றும் வாழ்க்கையின் வாயிலாக அப்படியே ஆகக்கடவது . ஆ பிதாவே , என் வாழ்க்கையிலும் உமது மக்களின் வாழ்க்கையிலும் உமது வல்லமையின் மூலம் பெரிய காரியங்களைக் காண்பீர் என்று நான் வாக்களிக்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே, நன்றி செலுத்தி நம்பிக்கையுடன், ஜெபிக்கிறேன். ஆமென்.