இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் எப்படி பாவ பாரத்தை சுமந்து நிற்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை . அவர் என் பாவத்தையும் , உங்கள் பாவத்தையும் , நம் எல்லோருடைய பாவத்தையும் சுமந்து தீர்த்தார். பாவத்தின் விளைவுகளை நாம் சுமக்க வேண்டியதில்லை என்பதற்காக அவர் எல்லாருடைய பாவத்தை அவர் மீது வைக்க அனுமதித்தார். ஆனால் அந்த பாவத்திற்கான கொடூரமான பலியினால் , நாம் குணமடைந்ததைக் உணருகிறோம் - ஒரு நபருக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான நோயிலிருந்து, அதாவது ஒரு ஆத்துமா பாவத்தின் பிடியினால் அகப்பட்டிருப்பதிலிருந்து குணப்படுத்தப்படுவதாகும் . நம்முடைய பாவங்களுக்காக அவர் குத்தப்பட்டார் , நொறுக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். இவைகளுக்கு பதிலாக, அவர் தமது மறுரூபமாகும் சமாதானத்தையும் இன்னுமாய் நமக்கு சொந்த ஸ்தலத்தையும் வைத்திருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

சமாதானத்தின் தேவனே , உமது கிருபையின் அற்புதத்தால் என் உள்ளத்தை நிரப்பியருளும் . உம் அன்பின் விலையை நான் மறக்காமல் இருக்க உதவி செய்தருளும் . உமது மீட்பின் கிருபையை குறித்ததான மாறாத, நிலையான நினைவை கொண்டு என்னுள் உற்சாகப்படுத்தும். உமக்கு கோடான கோடி நன்றிகளை செலுத்தி, இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து