இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கையை அழிக்கும், பள்ளிகளை அச்சுறுத்தும், தேசங்களை அழித்து, நமது தெருக்களை பாதுகாப்பற்றதாக மாற்றும் நம் கலாச்சாரங்களில் பரவி வரும் கொடுமைக்கு பலர் தீர்வு தேடும் போது, ​​தேவனின் ஞானவானான நீதிமொழிகளின் ஆசிரியர்,பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நமக்கு போதித்ததை நினைவிற்கொள்ள ஏன் யாரும் முற்படுவதில்லை? உண்மையான அல்லது கற்பனையான எந்தவொரு நபரின் மேன்மை வன்முறையால் கட்டமைக்கப்படுமானால், அவர்களை நம் முன்னோடிகளாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். "கொடுமையுள்ளவன் மேல் பொறாமை கொள்ளாதே,அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.. இது தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நாம் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்ட பிரபலமான நிலை அல்ல! என்று உங்களில் சிலர் என்னிடம் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன், இந்த கருத்தை கூறினது தேவனால் வழிநடத்தப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர் என்பதை தயவு செய்து உணருங்கள். "கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே, அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே ..." இஸ்ரேலின் மிகவும் பிரபலமான போர்வீரனின் மகன் எந்த வடிவத்திலும் கொடுமையின் அபாயத்தை புரிந்துக் கொண்டான். உண்மையில், உன்னதமானவரின் குமாரன் இதை மிகச் சிறப்பாகக் கூறினார்: "சமாதானம் செய்பவர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்."

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே , எங்கள் கலாச்சாரத்தின் கொடுமையிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். துன்மார்க்கரின் கொடுமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். நம் உலகில் ஊடுருவும் அருவருப்பான வழிபாட்டிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். தயவு செய்து, அன்பான பிதாவே , பெலனுள்ள , உன்னதமான மற்றும் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய முன்னோடிகளை எங்களுக்கு தாரும் . மேலும், அன்பான பிதாவே, அவர்களைக் காணும் கண்களையும், அவர்களைக் கௌரவிக்கும் தைரியத்தையும் எங்களுக்குத் தாரும். இயேசுவின் நாமத்தினாலே , எங்கள் உலகில் நீர் கொடுக்கிற அமைதிக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து