இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சிலுவை அதின் மிக அடிப்படையான மற்றும் மூல வடிவத்தில் பார்க்கும்போது மிகவும் விரும்பத்தகாத அடையாளமாகும் (1 கொரிந்தியர் 1:18-24). தேவன் தம்முடைய குமாரனை மனுஷ சாயலாக்கி நம்மிடையே வாழ அனுமதிப்பது என்பது ஆச்சரியமானது . கிறிஸ்துவானவர் மனுஷர் படும் வேதனைகளும் மற்றும் பாடுகளுக்கு இந்த மரண சரீரத்தில் தம்முடைய குமாரனை விருப்பத்துடன் உட்படுத்தப்படுவது நினைத்துப் பார்க்க முடியாதது. தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து சிலுவையின் அவமானங்களையும் மனிதாபிமானமற்ற செயல்களையும் சகித்துக்கொள்வது என்பது கிரகிக்கமுடியாத ஒன்றாகும் . இருப்பினும், அதுதான் சத்தியத்தின் நற்செய்தி ! முட்டாள்தனமாகவும், பலவீனமாகவும், புண்படுத்துவதாகவும் தோன்றக்கூடிய இந்த காரியம் நம்மை மீண்டும் ஜெநிப்பித்து , கிறிஸ்துவுக்குள் இணையற்ற நம்பிக்கைக்கு நம்மை ஊக்குவிக்கும் வல்லமையை கொண்டுள்ளது. இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலுக்கு நாம் வரும்போது, சாத்தியமற்றதை அடைகிறோம், இது நமக்காகவும், நம்மில், இயேசுவிலும், சிலுவையிலும் அவர் மரித்ததின் மூலம் சாத்தியமாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தேவன் மாத்திரமே அந்த வழியில் நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தார் .
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் கிருபையுமுள்ள பிதாவே, சிலருக்கு சிலுவை முட்டாள்தனமாகவும், பைத்தியமாகவும் தோன்றலாம் என்பதை நான் அறிவேன். சிலுவையை ஒரு அடையாளமாக அணிந்த சிலர், சிலுவையில் அவர் செய்ததற்காக கிறிஸ்துவை மதிக்கவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் பிதாவே, சிலுவைக்குச் செல்ல இயேசுவானவரின் விருப்பம் எனக்கு மிகவும் உறுதியளிக்கிறது மற்றும் வியக்கத்தக்க வகையில் பெலன் தருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னை மீட்க இயேசுவை அனுப்பியதன் மூலம் உம் தியாக அன்பினால் என் இருதயத்தைக் கவர்ந்தீர்கள். உம் கிருபையின் ஈவுக்கும் , எனக்காக சகித்து துன்பப்பட்ட இயேசுவின் விருப்பத்திற்காகவும் கோடானு கோடி நன்றி. அவருடைய நாமத்தினாலே உம்மை துதித்து, நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன், ஆமென்.