இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சுவிசேஷ புத்தகங்கள் (மத்தேயு, மார்க், லூக்கா மற்றும் யோவான்) ஒரு காரியத்தை நமக்கு தெளிவுபடுத்துகின்றன, இயேசுவின் சிலுவை மரணம் தற்செயலானதல்ல மாறாக அது தேவனின் அநாதி தீர்மானமென்று தெளிவுபடுத்துகிறது . எருசலேமில் தனக்குக் காத்திருக்கும் சவால்களை இயேசு அறிந்திருந்தார், அதே முடிவினின்று (மரணத்தினின்று) நம்மை விடுவிக்க அவர் அதற்குள்ளாய் கடந்து சென்றார் . நாம் நம்முடைய சவால்களை விசுவாசத்தோடே எதிர்த்து மேற்கொண்டால் மாத்திரமே தேவன் நம்மை அந்த வலிகளைகடந்து ஜெயத்தை பெற்றுக்கொள்ளும்படி நடத்தி செல்வார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே, அன்புள்ள பிதாவே , உமது குமாரனின் மரணத்தின் மூலமாய் உம் கிருபையினால் என் பாவத்தை மூடிய உமது திட்டத்திற்காக உமக்கு நன்றி. அவருடைய தியாகத்தை உணர்ந்து, பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியின் நம்பிக்கையின்படி நான் இன்று வாழ விரும்புகிறேன், அதனால் என் வாழ்க்கை உம் குமாரனின் வெற்றியைப் பிரதிபலிக்கும். என் விலையேறப் பெற்ற இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து