இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பஸ்கா பண்டிகைக்கு முந்தின நாள் இரவு வேளையில் இயேசுவானவர் எங்கே இருப்பார் என்று யூதாஸ் அறிந்திருந்தான் . இயேசு தம் சீஷர்களுடன் தோட்டத்தில் ஜெபிப்பார் என்பது இரகசியமான காரியமாக இருக்கவில்லை. நமக்கு துரோகம் செய்ய நினைக்கும் ஒருவர் இருந்தால், அந்த நபர், நம் எதிரிகளை எங்கே கண்டுபிடிக்க முடியும் என்று சொல்வார்? ஜெபிப்பதற்கு நாம் எங்கு செல்வோம் என்று அவர்களுக்குத் தெரியுமா? சுவாரஸ்யமான கேள்விகள், இல்லையா? ஜெபம் செய்யும் இடத்தில் நம்மைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை நம் எதிரிகள் அறிந்திருப்பதை விட சிறந்த புகழ்ச்சியான காரியத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

என்னுடைய ஜெபம்

பிதாவே, விலையேறப்பெற்ற நேரமாகிய ஜெப வேளைகளில் உம்முடன் அதிக விசுவாசத்துடன் சேராததற்காக, , அடியேனை மன்னியும். உம்முடன் என் ஜெப நேரத்தில் நான் பரபரப்பாகவும் , ஒருமித்தில்லாமலும் , வருத்தத்துடனும், ஆர்வமில்லாமலும் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக என்னை மன்னியும் . நான் ஏன் இந்த ஆசீர்வாதத்தை ஒரு ஒழுக்கமில்லாமல் அணுகுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த ஜெபத்தின் கிருபைக்கு என்னை மகிழ்ச்சியுடன் அழைக்கும் அனலுள்ள ஆவியை என் இருதயத்தில் உருவாக்க நான் ஜெபிக்கிறேன். உம் சமூகமும் அக்கறையும்தான் என் நிலையான நம்பிக்கையாகும் . நான் அலட்சியமாக இருந்தபோதும், நீர் எப்போதும் என் ஜெபத்தை கேட்டுக் கொண்டிருப்பதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே , நான் ஜெபித்து , நன்றி கூறுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து