இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனின் கிருபை நம்மை நம் ஆண்டவராகவும் இரட்சகராகவும் இருக்கிற இயேசுவானவருடன் மீட்பின் உறவுக்குள் கொண்டு வந்துள்ளது. விசுவாசிகளாக, சிலுவையில் இயேசுவின் தியாக மரணம், ஒரு பயங்கரமான நீதியின் தவறு மற்றும் ஒரு நல்ல மற்றும் ஒழுக்கமான மனிதனின் கொலையை விட அதிகம் என்பதை நாம் உணர்ந்துக்கொள்ளுகிறோம் . இயேசுவானவர் தேவனுடைய குமாரன். அவர் இம்மானுவேல், தேவன் நம்மோடு இருக்கிறார் . அவர் தம்முடைய அன்பை நமக்குக் காண்பிக்க தேவனின் அன்பான ஞானமான வழி இதுவே . இயேசு நம் நீதியாய் இருக்கிறார் . அவர் நம் பாவங்களைத் தம்மேல் ஏற்றுக்கொண்டு, அவருடைய மரணத்தின் மூலம், தம்முடைய இரத்தத்தை சிந்துவதன் மூலம் நம்மை நீதிமான்களாக்கினார். இயேசுவானவர் நம்மை தொடர்ந்து பரிசுத்தம் செய்பவராய் இருக்கிறார் (கர்த்தருடைய பந்தி). அவருடைய இரத்தம் நம் இரட்சிப்பின் தொடக்கத்தில் நம்மைச் சுத்திகரிக்கிறது, நாம் அவருக்காக வாழும்போது அதைத் தொடர்கிறது. இயேசு நம் நம்பிக்கை. அவருடைய மரணம் நம் பாவங்களுக்கான பலியாயும் தேவனுடனான நமது ஒப்புரவையும் குறிக்கிறது. இயேசு நம்மை மீட்கும் கிரயம் . பாவம், மரணம் மற்றும் நரகத்திலிருந்து நம்மை மீட்க அவர் விலையை செலுத்தினார். இயேசு நமக்கு எல்லாமுமாமே !
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ளவரும் அப்பா பிதாவுமாகிய தேவனே , உமது பரிசுத்தத்திற்காக நன்றி. உமது நீதிக்காக நன்றி. உமது கிருபையான மன்னிப்பிற்காக நன்றி. உமது குமாரனுடைய இருதயத்தைப் போன்ற ஒரு இருதயத்தை என்னில் வனைந்து , உமது ராஜ்யப் பணிக்கு என்னை மிகவும் பயனுள்ள பாத்திரமாக்குங்கள். என்னை மேன்மேலும் இயேசுவானவரை போல ஆக்குங்கள். அவருடைய நாமத்தினாலே, நான் ஜெபிக்கிறேன். ஆமென்.