இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"அவன் எங்கே நோக்குகிறானோ அதை நோக்கியே அவன் வாகனத்தை ஓட்டுகிறோம் , அவனுடைய பார்வை எங்கே பார்க்கிறதோ அதே திசையில் வாகனத்தை செலுத்துகிறான் !" என்று மகிழ்ச்சியற்ற மனைவி தன் கணவனைப் பற்றி கூறுவது மெய் தான். அவன் திசைமாற்றி தன் சுக்கான்னை தான் பார்க்கிற திசைக்குத் திருப்புகிறான் . இந்தக் கூற்று நம் ஒவ்வொருவருக்கும் இன்னுமாய் நம் வாழ்க்கைக்கும் பொருந்தும் : " ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ எங்கே நோக்குகிறார்களோ அங்கேயே அவர்கள் வாழ்கிறார்கள் !" அதனால்தான் நாம் இயேசுவின் மேல் நம் கண்களை நிலைநிறுத்துவது முக்கியம்! நாம் எங்கு நோக்கி பார்க்கிறோமோ அதையே நம் இருதயமும், நம் வாழ்க்கையும் பின்பற்றும்! நமது கண்கள் எப்பொழுதும் இயேசுவையே நோக்கி இருப்பதை உறுதி செய்வோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்தமுள்ள தேவனே, உம்முடைய கிருபை, இரட்சிப்பின் ஈவு இல்லாமல் நான் உம்மை நம்பிக்கையுடன் கிட்டி சேரமுடியாது. இயேசுவை அனுப்பியதற்காக உமக்கு நன்றி! அவருடைய வாழ்க்கை, மரணம்,உயிர்த்தெழுதல், மகாமேன்மை மற்றும் அவரது பரிந்துரைகளுக்காக நன்றி. அவர் மீது என்னுடைய கண்கள் எப்பொழுதும் நோக்கி இருக்குமென்று இந்த நாளில் நான் உறுதியளிக்கிறேன்! அவருடைய பரிசுத்த நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து